எப்பொழுது நாம் நமது தனித்துவத்தைக் கடந்துவிடுகிறோமோ, அப்பொழுதுதான் நாம் உண்மையான மனிதர்களாவோம். அகங்காரம் அன்று உதவியது; இன்று அகங்காரம் தடையாகிறது. பிளவுபட்ட தனிமனிதனை உலகளாவிய மனிதனாக உருமாற்றுக. இதுவே உனது இலக்கு. – ஸ்ரீ அரவிந்தர்
பிராண ஆசையின் தன்மையை நீ சரியாகப் புரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அதை நுகர நுகர பிராண ஆசை வளரும், அது திருப்தியடைந்து விடாது. உன்னுடைய ஆசையை நிறைவேற்றினால் அது மேலும் மேலும் வளரத் தொடங்கும். இன்னும் அதிகம் […]
காய்ச்சல்கள், மனத்தொல்லை இவற்றிற்கு உறக்கம் பெரிய உதவி. உறக்கம் இல்லாமலிருப்பது மிகவும் கெடுதலாகும் – அது குணப்படுத்தும் ஒரு சாதனத்தை இழப்பதாகும். – ஸ்ரீ அரவிந்தர்
ஆசைகளை முற்றிலுமாக உடனடியாக விட்டொழிப்பது கடினம் – சரியான ஆசைகள் மேலோங்கி நின்றால் அதுவே இறுதி வெற்றிக்கு உறுதியளிப்பதாகும், ஆகவே அதற்காக தொல்லைப்படாதே. இவையெல்லாம் படிப்படியாகவே நடக்கும் – முன்னேற்றம் தொடங்கிவிட்டால் சாதனையின் விளைவுபற்றிய அடிப்படையான […]
யாராலும் ஆசைகளை எளிதில் நீக்கிவிட முடியாது. முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால் அவற்றைப் புறத்தே உள்ள ஒன்றாக உணர்ந்து மேற்பரப்பிற்குத் தள்ள வேண்டும், உள் பாகங்களை அமைதியும் தெளிவும் பெறச் செய்யவேண்டும். அதன் பிறகு அவற்றை […]
உண்மையான ஓய்வு, சாந்தி, மோனம், ஆசையின்மை இவற்றை அடிப்படையாகக் கொண்ட அக வாழ்விலேயே உள்ளது. இதைத் தவிர வேறு ஓய்வு இல்லை – ஏனெனில் அது இல்லாவிட்டால் நீ அதில் ஈடுபாடு காட்டினாலும் காட்டாவிட்டாலும் இயந்திரம் வேலை […]