வளிமண் டலமோ வான் நிலன் இடையே சிலிர்ப்புடன் பிணைக்கும் இணையம் ஆனது, மதகுரு நிகர்த்த உயரிய தென்றல் பதங்களி னோடு பாடிய பாசுரம் விரிந்த சிறகுடன் பறந்தே எழுத்து மேடைக் குன்றுகளில் வீழ்ந்து தளர்ந்தது, விண்தொடும் […]
மூடிய முகத்திரை இட்ட ஆதவன் தன்னை தோக்கிப் பின்னே திரும்பிப் பாதி விழியால் பார்த்ததும் தேவியோ ஆழ்ந்த சிந்தனை அடைந்தவள் ஆகி அதன்பின் அகன்றாள் அமரப் பணிக்கே. – ஸ்ரீ அரவிந்தர்
நித்தியப் பேறு, நிலையுறு மாற்றம் இவற்றிடை உலவும் இறைத்தூ(து) அணங்காம் அனைத்தையும் அறிதிறத்(து) அருண்மா தேவி, விதிவழிப் பயணம் யாவையும் மேற்கொள்ளும் விண்ணக மீன்களின் வீதித் தடங்களைச் சற்றே சாய்ந்து பார்வை பதிக்கையில், அவள்மலர் அடிகள் […]
வாழ்வின் ஒடுங்கிய வரம்பு தனிலே எழுந்த திருநிறை எழிலுடைக் காட்சி நேரம் சிறிது நிலவி அதன்பின் நெடுநினை(வு) ஆர்ந்த நிலமகள் தன்னின் நுதல்வளை வினிலே நுடங்கிக் கவிந்தது. – ஸ்ரீ அரவிந்தர்