அழிவிலா மெய்ப்பொருள் அதனின் தடத்தினை அருகிலே நிலமகள் அறிந்து பூத்திட, புவனத்(து) இயற்கையின் கவனச் செவியோ தேவியின் சீரடிச் சிலம்பிசை மடுத்திட, வெளிகள் அளாவிய வியாபகம் தேவிபால் அன்னையின் அளப்பரும் நோக்கினைத் திருப்பிட, ஆழத்(து) அடைத்தே காக்கப் பட்ட அகிலத்(து) அமைதியின் சிதறிய துகள்களை வெளியே கொணரும் விதமாய்த் தூண்டிய தேவியின் ஒளிர்நகை திக்கெலாம் நிறைந்தது.
– ஸ்ரீ அரவிந்தர்