நித்தியப் பேறு, நிலையுறு மாற்றம்
இவற்றிடை உலவும் இறைத்தூ(து) அணங்காம் அனைத்தையும் அறிதிறத்(து) அருண்மா தேவி, விதிவழிப் பயணம் யாவையும் மேற்கொள்ளும் விண்ணக மீன்களின் வீதித் தடங்களைச் சற்றே சாய்ந்து பார்வை பதிக்கையில், அவள்மலர் அடிகள் வான்வெளி ஏந்திடத் தயார்நிலைக் கோலம் தாங்கக் கண்டனள்.
– ஸ்ரீ அரவிந்தர்