Positive Thoughts

February 24, 2023

சிந்தனைப் பொறிகள்

பகுத்தறிவு பிரிக்கின்றது, விவரங்களை வரைய றுத்து அவற்றிடையே வேறுபாட்டை நிறுவுகின்றதுஞானமோ ஒன்றுபடுத்துகின்றது. வேற்றுமைகளை ஒரே இசைவினுள் இணைக்கின்றது. – ஸ்ரீ அரவிந்தர்
February 23, 2023

சிந்தனைப் பொறிகள்

மனிதர் அறிவென்றழைப்பது, பொய்த் தோற் றங்களைப் பகுத்தறிவால் ஆய்ந்து அனுமானித்து ஏற்றுக்கொள்வதேயாகும். ஞானமோ, திரைக்குப் பின் நோக்குகின்றதுகாட்சியைப் பெறுகின்றது. – ஸ்ரீ அரவிந்தர்
February 22, 2023

சிந்தனைப் பொறிகள்

பகுத்தறிவு இறக்கும்போதுதான் ஞானம் பிறக் கின்றது என்பதை நான் தாமதித்துத்தான் அறிந் தேன்; அம்முக்திக்கு முன்னர் நான் அறிவினை மட்டுமே பெற்றிருந்தேன். – ஸ்ரீ அரவிந்தர்
February 21, 2023

சிந்தனைப் பொறிகள்

விலங்குநிலையிலுள்ள நமது பரிணாமம் இது வரை வெற்றிகொள்ளாத களங்களில் நமக்கெனக் காத்திருக்கும் வரம்பற்ற உவகைகள், பூரண சக்திகள், சுயமாய்த் திகழும் அறிவின் ஒளிவீசும் பரப்புகள், நம் ஜீவனின் அகன்ற அமைதிநிலைகள் ஆகியவற் றின் கணநேர அனுபவம் […]
February 20, 2023

சிந்தனைப் பொறிகள்

நான் ஒரு ஞானியல்லன், இறைவன் தன் செய லுக்கென எனக்களிக்கும் அறிவையன்றி வேறெதை யும் நானறியேன். நான் காண்பது பகுத்தறிவா மடமையா என்பதை எவ்வாறு நானறிவேன்? இல்லை யில்லை, நான் காண்பது பகுத்தறிவுமன்று, மடமை யுமன்று; […]
February 19, 2023

சிந்தனைப் பொறிகள்

நான் பேசும்போது பகுத்தறிவு, “நான் இதைச் சொல்வேன்” என்கிறது; ஆனால் இறைவனோ அச் சொல்லை என் நாவிலிருந்து பறித்துவிட, பகுத்த றிவை நடுங்கச் செய்யும் வேறெதையோ என் உதடுகள் சொல்கின்றன. – ஸ்ரீ அரவிந்தர்
February 18, 2023

சிந்தனைப் பொறிகள்

விரிந்தகன்ற, நித்திய அறிவிலிருந்து துள்ளிப் பாய்ந்து வரும் ஒளிமிகு மெல்லிய நதியே ஞான வொளியாகும். பகுத்தறிவு புலனறிவுக்கு எவ்வளவு அப்பாற்பட்டதோ, அதைவிடவும் முழுமையாக ஞானவொளி பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாகும். – ஸ்ரீ அரவிந்தர்
February 17, 2023

சிந்தனைப் பொறிகள்

ஒன்றோடொன்று தொடர்புகொண்ட அறிவு, ஞானம் என்னும் இரு சக்திகள் மனிதனுள் உள்ளன. உருக்குலைவிக்கும் இடைப்பொருளினூடே தெரி கின்ற மெய்மையில் சிறிதளவை மனம் துழாவித் தேடி அடைவதை அறிவு என்கிறோம். தெய்விகப் பார்வையுடைய கண் ஆத்மனில் காண்பது […]