ஸ்ரீ அரவிந்தர்

October 21, 2021
ஸ்ரீ அரவிந்தர்

இன்பம் – வலி

இன்பம் வலியாக அல்லது வலி இன்பமாக மாறும், ஏனெனில் அவற்றின் இரகசிய யதார்த்தத்தில் அவை உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளில் வித்தியாசமாக உருமாற்றம் செய்யப்படுகின்றன. – ஸ்ரீ அரவிந்தர்
October 13, 2021
ஸ்ரீ அரவிந்தர்

ஆசை

நாம் மகிழ்ச்சியைத் தாண்டியவுடன், நாம் பேரின்பத்தைப் பெறுவோம். ஆசை உதவியாளராக இருந்தது; ஆசை ஒரு பொருட்டல்ல. – ஸ்ரீ அரவிந்தர்
October 11, 2021
ஸ்ரீ அரவிந்தர்

அகங்காரம்

எப்பொழுது நாம் நமது தனித்துவத்தைக் கடந்துவிடுகிறோமோ, அப்பொழுதுதான் நாம் உண்மையான மனிதர்களாவோம். அகங்காரம் அன்று உதவியது; இன்று அகங்காரம் தடையாகிறது. பிளவுபட்ட தனிமனிதனை உலகளாவிய மனிதனாக உருமாற்றுக. இதுவே உனது இலக்கு. – ஸ்ரீ அரவிந்தர்
September 22, 2021
ஸ்ரீ அரவிந்தர்

எதிரி

என் போட்டியாளரின் வீழ்ச்சி என் சொந்த அவமானம், நான் என் எதிரியைப் பார்க்கும்போது ஸ்ரீகிருஷ்ணரின் முகத்தைப் பார்க்கிறேன். – ஸ்ரீ அரவிந்தர்
September 14, 2021
ஸ்ரீ அரவிந்தர்

பிராண ஆசை

பிராண ஆசையின் தன்மையை நீ சரியாகப் புரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அதை நுகர நுகர பிராண ஆசை வளரும், அது திருப்தியடைந்து விடாது. உன்னுடைய ஆசையை நிறைவேற்றினால் அது மேலும் மேலும் வளரத் தொடங்கும். இன்னும் அதிகம் […]
September 13, 2021
ஸ்ரீ அரவிந்தர்

உறக்கம்

காய்ச்சல்கள், மனத்தொல்லை இவற்றிற்கு உறக்கம் பெரிய உதவி. உறக்கம் இல்லாமலிருப்பது மிகவும் கெடுதலாகும் – அது குணப்படுத்தும் ஒரு சாதனத்தை இழப்பதாகும். – ஸ்ரீ அரவிந்தர்
September 10, 2021
ஸ்ரீ அரவிந்தர்

ஆசைகள்

ஆசைகளை முற்றிலுமாக உடனடியாக விட்டொழிப்பது கடினம் – சரியான ஆசைகள் மேலோங்கி நின்றால் அதுவே இறுதி வெற்றிக்கு உறுதியளிப்பதாகும், ஆகவே அதற்காக தொல்லைப்படாதே. இவையெல்லாம் படிப்படியாகவே நடக்கும் – முன்னேற்றம் தொடங்கிவிட்டால் சாதனையின் விளைவுபற்றிய அடிப்படையான […]
September 2, 2021
ஸ்ரீ அரவிந்தர்

குரு

குரு எல்லா வழிகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் – ஆழ்நிலை, ஆளுமை, தனிப்பட்டநிலை. – ஸ்ரீ அரவிந்தர்
August 26, 2021
ஸ்ரீ அரவிந்தர்

ஆசை

யாராலும் ஆசைகளை எளிதில் நீக்கிவிட முடியாது. முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால் அவற்றைப் புறத்தே உள்ள ஒன்றாக உணர்ந்து மேற்பரப்பிற்குத் தள்ள வேண்டும், உள் பாகங்களை அமைதியும் தெளிவும் பெறச் செய்யவேண்டும். அதன் பிறகு அவற்றை […]