ஸ்ரீ அரவிந்தர்

August 4, 2023

சிந்தனைப் பொறிகள்

அறிவு நம்முன் புத்தம் புதியதாக இருக்கும் போது, அது வெல்லற்கரியதாகும்; அது பழமையுறும் போது தன் சிறப்பை இழந்துவிடுகிறது. ஏனெனில் இறைவன் எப்போதும் முன்சென்றுகொண்டே இருக்கிறான். – ஸ்ரீ அரவிந்தர்
August 3, 2023

சிந்தனைப் பொறிகள்

மேதமை ஓர் ஒழுங்கமைப்பைக் கண்டுபிடிக்கி றது; சாதாரணத் திறன் அதை மாறாத கோட்பா டாக்கி, புதியதொரு மேதமை அதைத் தகர்க்கும் வரை பயன்படுத்துகிறது. அனுபவத்தில்முதிர்ந்த தளபதிக ளைப் படைத் தலைவர்களாக்குவது ஆபத்துக்குரிய தாகும்; ஏனெனில் எதிர்த் […]
August 2, 2023

சிந்தனைப் பொறிகள்

தன்னுடைய விஞ்ஞான, நடைமுறை அழுங்க மைப்பிலும் திறமையிலும் ஐரோப்பா இறுமாப் டைகிறான். அவளுடைய ஒழுங்கமைப்பு முழுமை யடையக் காத்திருக்கிறேன்; அப்போது ஒரு குழந்தை அவளை அழிக்கும். – ஸ்ரீ அரவிந்தர்
August 1, 2023

சிந்தனைப் பொறிகள்

ஒழுங்கமைப்பது தேவையே; ஆனால் வொழுங்கமைப்பை உருவாக்கிக் கடைப்பிடிக்கும் அங் போதும், அமைப்புகளெல்லாம் தம் இயல்பில் நிலையற்றவை, அரைகுறையானவை என்னும் உண்மையை நாம் எப்போதும் உறுதியாக நினை விற்கொள்ள வேண்டும். – ஸ்ரீ அரவிந்தர்
July 31, 2023

சிந்தனைப் பொறிகள்

நடைமுறை அறிவு வேறுவிதமானது; அது உண்மையானது, பயனுள்ளது, ஆனால் ஒருபோதும் முழுமையானதாக இருப்பதில்லை. எனவே அதை வகைப்படுத்தி ஒழுங்கமைப்பது தேவையாகிறது, ஆனால் அவ்வாறு செய்வது அழிவுக்கு வழிவகும். – ஸ்ரீ அரவிந்தர்
July 30, 2023

சிந்தனைப் பொறிகள்

ஞானம் நம்முன் அடியெடுத்து வைக்கும்போது அவள் அளிக்கும் முதற்பாடம் இதுவே: “அறிவென் பது ஏதுமில்லை; வரம்பற்ற இறைவனைச் சுட்டிக் காட்டும் குறிப்புகள் மட்டுமே உண்டு.” – ஸ்ரீ அரவிந்தர்
July 29, 2023

சிந்தனைப் பொறிகள்

இதுவரை நான் அறிந்துள்ளது சிறிதளவே அல் இது அதுவுமில்லை என்று நான் உணர்வதே என் னுள் உதிக்கும் ஞானத்தின் அறிகுறியாகும். எனினும், அந்தச் சிறிதளவையும் தான் மெய்யா கவே அறிவேனெனில், நான் அனைத்தையும் ஏற்க னவே […]
July 28, 2023

சிந்தனைப் பொறிகள்

எண்ணம் என்பது உண்மையை நோக்கி எய் பயப்படும் ஓர் அம்பைப் போன்றதாகும். தன் இலக் கின் ஒரு புள்ளியை மட்டுமே அதனால் தொட வியலும், முழு இலக்கையும் அதனால் அடையவிய வாது. ஆனால் வில்லாளனோ, தான் […]
July 27, 2023

சிந்தனைப் பொறிகள்

உன்னை நீயே இரக்கமின்றி ஆய்ந்துபார்; அப் போது நீ பிறரிடம் பரிவுடனும் இரக்கத்துடனும் நடத்துகொள்வாய். – ஸ்ரீ அரவிந்தர்