ஸ்ரீ அன்னை

June 10, 2022
ஸ்ரீ அன்னை

முக்கியத்துவம்

அற்ப விஷயங்களுக்கு எல்லாம் அதிக முக்கியத்துவம் தரவேண்டாம். உணரப்பட வேண்டிய நிறைவான முழுமைப் பொருளைச் சிந்திப்பது ஒன்றே முக்கியமானதாகும். அதை உணர்வதற்கே நாம் முடிந்த வரை முயற்சி செய்ய வேண்டும். உலகில் நாம் அடையவிருக்கும் உயரிய […]
June 9, 2022
ஸ்ரீ அன்னை

தடை

முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் கவலைப்படுவது முன்னேற்றத்திற்குத் தடையாகவே அமையும். முழு நம்பிக்கையுடனும் எளிமையுணர்வோடும் இறைவனின் உதவிக்காக நம்மைத் திறப்பதும் வெற்றியின் மேல் நம்பிக்கை வைப்பதும் நல்லது. – ஸ்ரீ அன்னை
June 8, 2022
ஸ்ரீ அரவிந்தர்

இடையூறுகள்

இடையூறுகளை அவை வரும் முன்னரே எதிர்பார்த்துக் காத்திருக்காதே. அவற்றை வெற்றி கொள்ள அது உதவாது. – ஸ்ரீ அன்னை
June 7, 2022
ஸ்ரீ அன்னை

அச்சம்

அச்சம் என்பது இறைவனின் அருள் மேல் உள்ள நம்பிக்கைக் குறைவையேக் காட்டுகிறது. நமது சமர்ப்பணம் முழுமையற்றதாகவும் ஒழுங்கற்ற தாகவும் உள்ளதைக் காட்டும் சரியான குறியீடே உனக்குள் தோன்றும் அச்சம். – ஸ்ரீ அன்னை
June 6, 2022
ஸ்ரீ அன்னை

கவலை

நாம் ஒவ்வொரு நாளும் அச்சமின்றி வாழ்வோமாக. எப்போதுமே நடக்க இயலாத சிலவற்றை எண்ணி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? – ஸ்ரீ அன்னை
June 5, 2022
ஸ்ரீ அன்னை

நேர்மை

நீ செய்வதை எல்லாம் நேர்மையுடன் செய். விளைவுகளை எல்லாம் இறைவனின் பொறுப்பிலேயே விட்டுவிடு. – ஸ்ரீ அன்னை
June 4, 2022
ஸ்ரீ அன்னை

மாற்றம்

நீ இப்போதுள்ள நிலையில் உனக்குத் திருப்தி இல்லை எனில் இறைவனிடம் இருந்து உதவியைப் பெற்று உனக்கு அனுகூலம் ஆக்கிக்கொள்; உன்னை மாற்றிக் கொள். உன்னை மாற்றிக் கொள்ளும் தைரியம் உனக்கு இல்லையெனில் விதியிடம் உன்னை ஒப்படைத்துவிட்டு […]
June 3, 2022
ஸ்ரீ அன்னை

கேலி

நான் எப்போதும் கேலி செய்வதாகத் தோன்றலாம். ஆனால் அது வெறும் வேடிக்கைக்காகச் சொன்னதன்று. உள்ளத்தில் இருந்து எழும்பும் நம்பிக்கை அது. தெய்வீக சக்தியை எதிர்த்து எதுவுமே நிற்க முடியாது என்ற நம்பிக்கையைப் புன்னகை வெளிப்படுத்துகிறது. கடைசியில் […]
June 2, 2022
ஸ்ரீ அன்னை

வேதனைகள்

நீ எவ்வளவுக்கு எவ்வளவு குறை கூறுகிறாயோ அவ்வளவுக் அவ்வளவு வேதனைகள் உனக்கு அதிகமாகும். – ஸ்ரீ அன்னை