கேள்வி: நாம் முன்னர் சந்தித்திருக்கிறோம் என்பது எப்படி?
அன்னை: நாம் எல்லோரும் முற்பிறவியில் சந்தித்தி ருக்கிறோம். இல்லாவிடில் நாம் இப்பிறவியில் ஒன்று சேர்ந்திருக்கமாட்டோம். நாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். காலங்காலமாக இறைவனின் வெற் றிக்காகவும், இப்புவியில் அவனது வெளிப்பாட்டுக் காகவும் பணிபுரிந்திருக்கிறோம்.