உறுதியூட்டும் சான்றுகள் காட்டிக் கடவுள் இல் லையென்று எனக்கு நிரூபித்தனர், நானும் அவர் களை நம்பினேன். பின்னர் நான கடவுளைக் கண்டேன், அவர் வந்தென்னை அரவணைத்தார். இப்போது நான் எதை நம்புவது, பிறருடைய வாதங் களையா, […]
மரணத்துக்குப் பின் தனிப்பட்ட மனத்தன்மை அழியாதிருக்கக்கூடும் எனினும், அமரத்துவம் என் பது அதுவன்று; உடலைக் கருவியாகவும் சாயலாக வும் கொண்டதும், பிறப்பும் இறப்பும் அற்றதுமாகிய. – ஸ்ரீ அரவிந்தர்
தன் அமரத்துவத்தை என் ஆன்மா, தானறியும். ஆனால் நீயோ ஒரு சவத்தைக் கூறுபோட்டு, “எங்கே உன் ஆன்மா, எங்கே உன் அமரத்துவம்?” என்று வெற்றிமுழக்கமிடுகிறாய். – ஸ்ரீ அரவிந்தர்
உன் நம்பிக்கைகளை மட்டுமே அறிவென்றும், பிறருடைய நம்பிக்கைகளைப் பிழை, அஞ்ஞானம், மோசடி என்றும் கூறாதே; அல்லது சமயப் பிரிவுக ளின் கோட்பாடுகளையும், அவற்றின் சகிப்பின்மை யையும் பழிக்காதே. – ஸ்ரீ அரவிந்தர்
மனிதர் அறிவென்றழைப்பது, பொய்த் தோற் றங்களைப் பகுத்தறிவால் ஆய்ந்து அனுமானித்து ஏற்றுக்கொள்வதேயாகும். ஞானமோ, திரைக்குப் பின் நோக்குகின்றதுகாட்சியைப் பெறுகின்றது. – ஸ்ரீ அரவிந்தர்
பகுத்தறிவு இறக்கும்போதுதான் ஞானம் பிறக் கின்றது என்பதை நான் தாமதித்துத்தான் அறிந் தேன்; அம்முக்திக்கு முன்னர் நான் அறிவினை மட்டுமே பெற்றிருந்தேன். – ஸ்ரீ அரவிந்தர்
விலங்குநிலையிலுள்ள நமது பரிணாமம் இது வரை வெற்றிகொள்ளாத களங்களில் நமக்கெனக் காத்திருக்கும் வரம்பற்ற உவகைகள், பூரண சக்திகள், சுயமாய்த் திகழும் அறிவின் ஒளிவீசும் பரப்புகள், நம் ஜீவனின் அகன்ற அமைதிநிலைகள் ஆகியவற் றின் கணநேர அனுபவம் […]