சிந்தனைப் பொறிகள்

June 12, 2023

சிந்தனைப் பொறிகள்

என்மீது அன்புகொண்ட இறைவா, என்னை அடி! இப்போது நீ என்னை அடிக்காவிடில், உனக்கு என்மீது அன்பில்லையென நான் அறிந்துகொள்வேன். – ஸ்ரீ அரவிந்தர்  
June 11, 2023

சிந்தனைப் பொறிகள்

இறைவன் தன்னுடனேயே ஒளிந்து விளையா டிக் கொண்டிருக்கும்போது, நாம் அவனை நாத்தி கன் என்கிறோம். ஆத்திகன்? ஒருவேளை அவன் இத்தகையன் அல்லன் ஏனெனில் அவன் இறை வனது சாயலைக் கண்டிருக்கிறான், அதைப் பற்றிப் பிடிக்க முயன்றிருக்கிறான். […]
June 10, 2023

சிந்தனைப் பொறிகள்

நான் விரும்புவது நிறைவேறுவதில்லை. நான் நன்மையெனக் கருதுவது நடப்பதில்லை. இதிலி ருத்து, உலகை வழிநடத்தும் ஒரு சர்வஞானி இல்லை. என்பதும் குருட்டுத்தனமான தற்செயல் நிகழ்ச்சிகளோ, இரக்கமற்ற விளைவுத் தொடர்புகளோ மட்டுமே இருக்கின்றன என்பதும் தெளிவாகிறது! – […]
June 9, 2023

சிந்தனைப் பொறிகள்

புழுதியிற் புரளும் குழந்தையொன்றைக் கண் டேன்; அதே குழந்தை தன் தாயால் நீராட்டப் பெற்று ஒளிரக் கண்டேன். இருமுறையும் அக் குழந்தையின் மாசற்ற தாய்மையின் முன் நடுங்கி நின்றேன். – ஸ்ரீ அரவிந்தர்
June 8, 2023

சிந்தனைப் பொறிகள்

எது தீது, எது நன்று என்பதை நான் மறந்துவிட் டேன்; இறைவனையும், இப்புவியில் அவன் புரியும் திருவிளையாடலையும், மனிதவினத்தில் இயங்கும் அவனது சங்கற்பத்தையும் மட்டுமே நான் காண்கி றேன். – ஸ்ரீ அரவிந்தர்
June 7, 2023

சிந்தனைப் பொறிகள்

நெப்போலியனை ஒரு கொடுங்கோலன் என்றும், கொலைகாரச் சக்கரவர்த்தி என்றும் எவரோ வருணித்தார்; ஆனால், போர்க்கோலம் பூண்டு ஐரோப்பாவில் வெற்றிநடையிட்ட கடவுளையே நான் கண்டேன். – ஸ்ரீ அரவிந்தர்
June 6, 2023

சிந்தனைப் பொறிகள்

இறைவன் அன்புடையவனாக இருப்பதனால் தான் அவன் பெருங் கொடியவனாக இருக்கிறாள். இது உனக்குப் புரியவில்லை, ஏனெனில் நீ கண்ண னைக் கண்டதில்லை, அவனுடன் விளையாடியதில்லைல. ஸ்ரீ அன்னை  
March 24, 2023

சிந்தனைப் பொறிகள்

பிறர் துன்புறுவதைக் காணும்போது நான் வருத்தமடைகிறேன். ஆனால் எனதல்லாத ஒரு விவேகம், அந்தத் துன்பத்தால் வரவிருக்கும் நன்மை யைக் காண்கிறது, அதை ஏற்றுக்கொள்கிறது. – ஸ்ரீ அரவிந்தர்
March 23, 2023

சிந்தனைப் பொறிகள்

இன்னலைக் கண்டு வாட்டமுற்று தான் அதைத் தீயது என்னும்போது, அல்லது நான் பொறாமைப் பட்டு மனமுடையும்போது, நித்திய மடையன் என் னுள் விழித்தெழுந்துவிட்டான் எனபதை நான் அறிந்துகொள்கிறேன். – ஸ்ரீ அரவிந்தர்