ஒருவர் தம்மிடம் உள்ள தூய்மையான விஷயங்களையே நினைத்துக் கொண்டிருத்தல் ஒருவர் தம்மிடம் எதற்கும் உதவாது. நம் சிந்தனையை தாம் அடைய வேண்டிய தூய்மை, ஒளி, அமைதி ஆகியவற்றின் மீதே செலுத்த வேண்டும்.
நாம் தவறு செய்து விடுவோமோ என்று ஒருவர் தன்னையே நொந்து கொள்ளத் தேவையில்லை. தன்னுடைய இறைவேட்கையில் முழு நேர்மையும் ஒருவர் வைத்திருந்தால் கடைசியில் எல்லாம் சரியாகிவிடும். – ஸ்ரீ அன்னை
நீ வாழ்க்கையில் ஒரு தவறை செய்துவிட்டால், உன் வாழ்க்கை முழுவதும் துன்பப்பட வேண்டும். அதைப் போலவே எல்லாரும் துன்பப்படுவார்கள் என்று அதற்குப் பொருள் அல்ல. தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தும் துன்பப்படாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால், […]
இறைவனை அறியவும் அவனாக வாழவும் விரும்பும் உன் ஆன்மாவின் வேட்கையையே நீ உணர்கிறாய். விடாது முயற்சி செய். மேலும் மேலும் நேர்மையுடன் செயல்படு. நீ நிச்சயம் வெற்றி பெறுவாய். – ஸ்ரீ அன்னை
எல்லாம் வல்ல இறைவனைப் பொறுத்த வரையில் பாவம் என்பதே இல்லை. நேர்மையான தெய்வீக வேட்கையாலும் தெய்வீக மாற்றத்தாலும் எல்லாக் குறைகளையும் களைய முடியும். – ஸ்ரீ அன்னை
உலகத்தின் செயல்பாடுகள் தவறாக இருந்தால், அதற்காக அஞ்சி ஓடிவிடக் கூடாது. இதனால் உலகை மாற்றிவிடவும் முடியாது. தவறுகளைக் களைய வேண்டும் என்ற எண்ணத்துடன், மனதில் அடக்கம், பணிவு ஆகிய குணங்களைக் கொண்டு நம் பணிகளை சரிவரச் […]