ஸ்ரீ அரவிந்தர்

November 1, 2023
ஸ்ரீ அரவிந்தர்

சிந்தனைப் பொறிகள்

நீ மலையுச்சியில் தனித்து அசைவற்று மௌன மாக அமர்ந்திருக்கும் அதேசமயத்தில், நீ வழிநடத்தும் புரட்சிகளை உன்னால் காணமுடிந்தால், நீ தோற் றங்களிலிருந்து விடுபட்டவனாவாய். தெய்விகப் பார்வை பெற்றவனாவாய். – ஸ்ரீ அரவிந்தர்
October 5, 2023

சிந்தனைப் பொறிகள்

நீ மகத்தான செயல்களையாற்றிப் பெரும் விளைவுகளை உண்டாக்கிக்கொண்டிருக்கும்போ தும், நீ நீயாகவே எதையும் செய்யவில்லை என்பதை உன்னால் காணமுடிந்தால், இறைவன் உன் கண் களை மூடியிருந்த திரையை அகற்றிவிட்டான் என் பதை நீ புரிந்துகொள்ளலாம்.  
September 20, 2023

சிந்தனைப் பொறிகள்

தனிமையை விரும்புவது அறிவை நாடுவதன் அறிகுறியாகும்; ஆனால் பெருந்திரளிலும் போர்க் களத்திலும் கடைவீதியிலும் நாம் தொடர்ந்து தனிமையை உணரும்போதுதான் அறிவை அடைந்த வராவோம். – ஸ்ரீ அரவிந்தர்
September 19, 2023
ஸ்ரீ அரவிந்தர்

சிந்தனைப் பொறிகள்

பொருட்களின் தொடக்கமென்றும் முடிவென் றும் நாம் கூறுவது, நம் அனுபவத்தின் நடைமுறைப் பழக்கத்தைச் சார்ந்த சொற்களேயாகும். உண்மை யில் இச்சொற்களுக்கு மெய்யான இருப்பு ஏதும் கிடையாது, தொடக்கமென்பதும் முடிவென்பதும் ஏதுமில்லை. – ஸ்ரீ அரவிந்தர்
September 18, 2023

சிந்தனைப் பொறிகள்

உலகமென்பது நெடுங்காலமாய்த் திரும்பத் திரும்ப வரும் ஒரு பின்னமாகும். அதன் முழு எண் பிரம்மனாகும். காலம் தொடக்கமும் முடிவும் உடை யதாகத் தோன்றுகிறது. ஆனால் அதன் ஒவ்வொரு கூறும் நித்தியமானதாகும்; அதற்கு உண்மையில் தொடக்கமேதும் இருந்ததில்லை, […]
September 17, 2023

சிந்தனைப் பொறிகள்

மறைந்திருக்கும் கவர்ச்சியொன்று தன்னிடமி ருந்தே தப்பியோட ஆர்வங்கொண்டு, தான் இருப்ப தையே தீவிரமாக மறுக்கும்போது, அது வெறுப்பு என்னும் உணர்வாக வெளிப்படுகின்றது. இதுவும் இறைவன் தன் படைப்பினுள் ஆடும்திருவிளையாடலே. – ஸ்ரீ அரவிந்தர்
September 16, 2023

சிந்தனைப் பொறிகள்

தன் சாதனைகளில் பெருமிதம் கொள்ளும் குழந்தையைப் போன்றதாகும், அறிவு: அது எதையா வது கண்டுபிடித்தவுடன் உற்சாகக் குரலெழுப்பி, இரைச்சலிட்டு வீதிகளில் ஓடியாடுகின்றது. விவே சுமோ, தன் சாதனைகளை வல்லமைமிக்க மௌனத் திலும் சிந்தனையிலும் நெடுங் காலத்திற்கு […]
September 16, 2023

சிந்தனைப் பொறிகள்

எல்லா அறிவையும் தான் வெற்றிகொண்டு விட்டதைப் போல் விஞ்ஞானம் பேசுகின்றது, நடந்து கொள்கின்றது. தனித்துச் செல்லும் விவேகமோ, அளவற்ற ஞானக் கடல்களின் விளிம்புகளில் எதி ரொலிக்கும் தன் காலடியோசையைக் கேட்டவாறே நடையிடுகின்றாள். – ஸ்ரீ அரவிந்தர்
September 15, 2023

சிந்தனைப் பொறிகள்

துறவைப் புகழ்ந்துரைத்த விவேகானந்தர், இந் திய வரலாறு முழுவதிலும் ஒரேயொரு ஜனகன் மட்டுமே இருந்ததாகக் கூறியுள்ளார், அது சரியன்று.பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்களெனத் கண்டு நீ புன்னகைபுரிவாய். – ஸ்ரீ அரவிந்தர்