ஸ்ரீ அன்னை

October 8, 2022

என் ஆசிகள்

இந்தியாவை நேசித்து அதன் மேன்மைக்காகப் பணிபுரிய விரும்புவோருக்காக என் ஆசிகள் – ஸ்ரீ அன்னை
September 25, 2022
ஸ்ரீ அன்னை

உணவு

எந்த ஒரு பற்றோ விருப்பமோ இன்றி உடல் வலுவிற்காகவும் நலத்திற்காகவும் உடல் தேவைக்காகவும் ஒருவர் அவசியம் போதுமான அளவு உணவைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். – ஸ்ரீ அன்னை
September 24, 2022
ஸ்ரீ அன்னை

என் உதவி எப்போதும் உண்டு

இறைவனுடன் ஐக்கியமாவதற்குப் பதில் நாக்கின் சுவையுணர்வுகளுக்கு நீ முன்னுரிமை கொடுப்பாய் எனில் அது உன் சொந்த அபிப்ராயம். நான் அதை ஆதரிப்பதில்லை என்பதைத் தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை. தன்னுடைய கீழ் இயல்பிலிருந்து மேலே வருவதா அல்லது […]
September 23, 2022
ஸ்ரீ அன்னை

உண்ண வேண்டுமே

ஒரு சாதகன் தன் உடல் தேவையின் பொருட்டு உண்ண வேண்டுமே தவிர தன் ஆசையைப் பூர்த்தி செய்ய அல்ல. – ஸ்ரீ அன்னை
September 22, 2022
ஸ்ரீ அன்னை

ஆசை

உனக்கு ஓர் ஆசை இருக்குமானால், நீ எதை ஆசைப்படுகிறாயோ அதனால் ஆளப்படுகிறாய். உன் மனதை உன் வாழ்வை அது ஆக்கிரமித்துக் கொள்கிறது. நீ அதற்கு அடிமையாகப் போய் விடுகிறாய். உனக்கு உணவின் மேல் ஆசை இருக்குமேயானால் […]
September 21, 2022
ஸ்ரீ அன்னை

திருப்தி

நீ அடையும் சின்னச் சின்ன திருப்தி ஒவ்வொன்றும் இலட்சியத்திலிருந்து பின்னோக்கி வைக்கும் ஒவ்வொரு அடியாகும். – ஸ்ரீ அன்னை
September 20, 2022
ஸ்ரீ அன்னை

தயாராய் இருக்க வேண்டும்

எது வந்தாலும் நாம் எடுத்துக் கொள்வோம். அதேபோல எது நம்மை விட்டுப் போனாலும் அதைப் போக விடுவதற்குத் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். – ஸ்ரீ அன்னை
September 19, 2022
ஸ்ரீ அன்னை

அடிமைத்தனம்

அடிமைத்தனம் மோசமானது. உறவுக்கு அடிமையாவதும் தேவைக்கு அடிமையாவதும் மோசமானது. – ஸ்ரீ அன்னை
September 18, 2022
ஸ்ரீ அன்னை

கேட்க முடியும்

தேவைப்படும் நேரத்தில்தான் எந்தப் பொருட்களையும் நாம் கேட்க முடியும். – ஸ்ரீ அன்னை