இறைவனுடன் ஐக்கியமாவதற்குப் பதில் நாக்கின் சுவையுணர்வுகளுக்கு நீ முன்னுரிமை கொடுப்பாய் எனில் அது உன் சொந்த அபிப்ராயம். நான் அதை ஆதரிப்பதில்லை என்பதைத் தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை. தன்னுடைய கீழ் இயல்பிலிருந்து மேலே வருவதா அல்லது பொருள் சார்ந்த படுகுழியில் வீழ்ந்து மூழ்குவதா என்று ஒவ்வொருவரும் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும். உயர்ந்த பாதையைத் தேர்ந்தெடுப்பவர்க்கு என் உதவி எப்போதும் உண்டு.
– ஸ்ரீ அன்னை