உனக்கு ஓர் ஆசை இருக்குமானால், நீ எதை ஆசைப்படுகிறாயோ அதனால் ஆளப்படுகிறாய். உன் மனதை உன் வாழ்வை அது ஆக்கிரமித்துக் கொள்கிறது. நீ அதற்கு அடிமையாகப் போய் விடுகிறாய். உனக்கு உணவின் மேல் ஆசை இருக்குமேயானால் நீ உணவிற்குத் தலைவன் இல்லை. உன் உணர்வே உனக்குத் தலைவன் ஆகிறது.
– ஸ்ரீ அன்னை