நீ மனங் கலங்கியது தவறு ; உன் மனத்திலும் இதயத்திலும் சந்தேகம் இருந்ததை இது காட்டுகிறது . ஒருவன் பரிபூரணமாகத் தூய்மையாக இருந்தால் அவனுக்கு எவ்வித சந்தேகமும் உண்டாகாது . மனத்தினால் உண்மையை அறியமுடியாது ; அது தோற்றங்களைக் கொண்டு மதிப்பிடுகிறது . தோற்றங்கள் எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்துக்கூட அல்ல , தான் கண்ட தோற்றத்திலிருந்தே மதிப்பிடுகிறது . அதனால் அதனுடைய மதிப்பீடு தவறாகவே இருக்கும்.
“உண்மை – உணர்வு ” ஒன்றே உண்மையை அறியவல்லது , அது ஒருபோதும் சந்தேகிப்பதோ மதிப்பிடுவதோ இல்லை .
– ஸ்ரீ அன்னை