எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருக்காதே. நீ முணுமுணுக்கும்போது எல்லாவிதமான கெட்ட சக்திகளும் உன்னுள்ளே நுழைந்து உன்னைக் கீழே தள்ளிவிடுகின்றன. மகிழ்வாய்ப் புன்னகை செய்து கொண்டே இரு. – ஸ்ரீ அன்னை
இறைவனுடைய சர்வ வல்லமையுள்ள சக்தியில் உண்மையான, உயிருள்ள நம்பிக்கையும் முழு நிச்சயமும் நமக்கு இருக்குமானால், இந்தப் பூவுலகம் முழுவதையும் திருஉருமாற்றம் செய்யும் வகையில் இறைவனின் வெளிப்பாடு தெளிவாகிவிடும். – ஸ்ரீ அன்னை
இச்சா சக்தி வேலை செய்ய சாந்தி இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. ஜீவன் கலக்க முற்றிருக்கும் போது அடிக்கடி இச்சா சக்தி அதை அமைதியடையு மாறு வற்புறுத்த வேண்டியதிருக்கும். -ஸ்ரீ அரவிந்தர்