அதிமானிட உண்மைக்கும் ஒளிக்கும் சேவை செய்யவும், அவை நம்முள்ளும், இப்புவியிலும் வெளிப்பட முன்னேற்பாடுகள் செய்யவும் தான் நாம் இங்கே இருக்கிறோம் என்பதை எக்காலமும் மறக்கலாகாது. – ஸ்ரீ அன்னை
கலத்தின் நறுமணத்தால் அதனுள்ளிருக்கும் பானத்தின் சுவையும் மாறும் என்கிறாய். மாறுவது சுவைதானே; அதன் அமரத்துவமளிக்கும் தன் மையை எதனால் பறிக்கவியலும்? – ஸ்ரீ அரவிந்தர்
சமயங்களிடையேயான சச்சரவு, அமுதத்தை ஏந்துவதற்கு எந்தக் கலம் தகுதியுடையது என்பது பற்றி அக்கலங்களினிடையே நிகழும் வாதத்தைப் போன்றதாகும். அவை தம் வாதத்தைத் தொடரட்டும்; எந்தக் கலத்தில் என்றாலென்ன, நாம் வேண்டுவது அமுதத்தை அருந்தி அமரத்துவம் அடைவதைத் […]