தீயவற்றின் கவர்ச்சியைக் காட்டிச் சோதிக்கும் போதுதான் கடவுள் மிக நன்றாக வழிநடத்துகிறார். கடுமையாகத் தண்டிக்கும்போதுதான் முழுமையாக அன்புசெலுத்துகிறார்; தீவிரமாக எதிர்க்கும்போது தான் மிகச் சிறந்த முறையில் உதவுகிறார். – ஸ்ரீ அரவிந்தர்
சமய அமைப்புகளின் கொடுமைக்கும், கோட் பாடுகளின் குறுகிய தன்மைக்கும் எதிராக எழும் இன்றியமையாத கண்டனக் குரலே நாத்திகமாகும். நாத்திகத்தைக் கல்லெனக் கொண்டு இறைவன் அந்த அழுக்கேறிய அட்டைவீடுகளைத் தகர்க்கிறான். – ஸ்ரீ அரவிந்தர்
உலகம் இதுவரை கண்ட வெற்றிகரமான புரட் சிகள் ஆறே; அவற்றுள்ளும் பெரும்பாலானவை கிட்டத்தட்ட தோல்விகளைப் போன்றே இருந்தன. இனால் இத்தகைய உயரிய பெருந் தோல்விகளின் வாயிலாகத்தான் மனிதகுலம் முன்னேறுகிறது. – ஸ்ரீ அரவிந்தர்
கடந்தகால அமைப்புகளை உடைத்தெறி. ஆனால் அவற்றின் உயிர்த்தத்துவத்தையும் நல் விளைவுகளையும் பேணிவைத்துக்கொள்; இல்லை யேல் உனக்கு எதிர்காலம் ஏதுமில்லை. – ஸ்ரீ அரவிந்தர்
நேர்மையற்றவராய் நடந்துகொள்கின் றனர். ஆனால் இத்தாயின் கொலையைக் கண்டு அதிர்ச்சியுறத் தமக்கு எப்போதும் உரிமை உண் டென்று அவர்கள் எண்ணுகிறார்கள். – ஸ்ரீ அரவிந்தர்
உன் நற்குணங்கள் மனிதருடைய புகழ்ச்சிக்கும் பரிசுக்கும் உரியவையாக இருக்கவேண்டாம்; உன் னுள் இருக்கும் இறைவன் உன்னிடம் கோருபவை யாகவும், உனக்கு முழுமையளிக்கக் கூடியவை யாகவும் அவை இருக்கட்டும். – ஸ்ரீ அன்னை
பெருந்தன்மையும் தாராள மனப்பான்மை யுமே ஆன்மாவின் விண்ணுலக வீடாகும்; இவை இல்லையேல், மனிதன் என நாம் காண்பது இருட்ட றையில் உழலும் ஒரு பூச்சியே, வேறில்லை. – ஸ்ரீ அன்னை