நான் வாழ்வின் செயல்களையும் யோகத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. வாழ்வே யோகமாக மலர்கிறது, செயல்களை உணர்வு பூர்வமாக இறைவனுக்கு சமர்ப்பணமாக்கும் போது, அவனுக்கே அவைகளை அர்ப்பணமாக்கும் போது. – ஸ்ரீ அன்னை
மனிதனின் சுமை அவன்தன் இதய தாபங்களில் இருந்தும் அவன் ஜீவஸ்தல உணர்வுகளிலிருந்தும் வாழ்வில் பெரும்பாலான நிகழ்வுகளைத் தனக்குத் தானே சிருஷ்டித்துக் கொள்வதனால் தான் ஏற்படுகின்றது. – ஸ்ரீ அன்னை