வாழ்வில் ‘வைராக்கியம்’ என்னும் தீவிரம் கடைப்பிடிக்கச் சுலபமானது. ஆனால் ‘சமதா’ என்னும் எல்லாவற்றுக்கும் ஈடுகொடுத்துக் கொண்டு வகைப்படுத்திச் செல்லும் பாங்கு என்பது அவ்வளவு எளிதல்ல. – ஸ்ரீ அன்னை
‘பிறகு, பிறகு’ என்னும் சுபாவம் பிசகானது. எதையும் ‘நாளை, நாளை` என்று தள்ளிப் போடும் நம் அறியாமை நம்மை ஒரு பாழ்மாளிகைப் பகுதியில் தான் கொண்டு போய் தள்ளி விடும். – ஸ்ரீ அன்னை
நம் ஒவ்வொருவர் ஆன்மாவும் வானுலக சுவர்க்கமும் ஒரே நேரத்தில் ஜனித்தவைகள். நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். நாம் தேவலோக தேவர்களுக்குச் சமமானவர்கள். – ஸ்ரீ அன்னை
ஜீவன் மண் தூசியிலும் ஒரு நிலையில் அளைகிறான். எப்படியாவது அற்புதத்தை எட்டி விடத் துடிக்கிறான். சடமோ ஆன்மாவோ ஆற்ற வேண்டுவதை அவன் அடையத் துடிக்கிறான். – ஸ்ரீ அன்னை