உன் தவறுகளை உணர்ந்து கொள்ளுதல் நல்லது. ஆனால் உன்னையே வதைத்துக் கொள்ளக் கூடாது. நீ வருந்தக் கூடாது அதற்குப் பதில் நீ உன்னைத் திருத்திக் கொள்ளுதலே சிறந்தது. – ஸ்ரீ அன்னை
என் பாதுகாப்பு உனக்கு எப்பொழுதும் இருக்கிறது. எந்தக் கெட்டதும் நடக்காது. ஆனால் அச்சத்தை ஒழிக்கும் முடிவுக்கு நீ வர வேண்டும். அதன் பிறகு என் சக்தி முழுமையாக வேலை செய்யும். – ஸ்ரீ அன்னை
நீ உன்னிடம் உள்ள தவறுகளை, உன் இயல்பில் உள்ள குறைகளை உணர்ந்து கொண்டாய் என்பது மிக நல்லது. அப்படி உணர்ந்தவுடன் அக்குறைகளைக் கடந்து வந்து அத்தகைய இயல்பையே உன்னால் மாற்றிவிட முடியும். – ஸ்ரீ அன்னை
ஒரு தவறு உணரப்பட்டவுடன் அதையே முன்னேற்றத்திற்குரிய வழியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்படுகிற மாற்றத்தை மனம் உணர்ந்துவிட்டால், அங்கு குற்றமும் அதற்கான காரணமும் மறைந்துவிடும். அதன்பிறகு அத்தவறு மீண்டும் நிகழாது. – ஸ்ரீ அன்னை
இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடையாமல் விட்டமையே உன் கடந்த காலத் ‘தவறுகளுக்குக் காரணமாகும். அந்தத் தவறுகளைச் சரி செய்ய ஒரே வழி, உன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதுதான். உண்மையாக. – ஸ்ரீ அன்னை
நம்முடைய குறைகளை, பலவீனங்களை எண்ணிப் பார்ப்பது சரிதான். ஆனால் அது புதிய முன்னேற்றத் திற்கான பெரிய தைரியத்தை நமக்கு அளிப்பதாய் இருக்க வேண்டும். எதிர்கால முழுமைக்கும் வெற்றிக்கும் தேவையான தீர்க்கமான முடிவுக்கு நாம் வர முழு […]