ஒருதொல்லையைப் பற்றி நீ நினைத்துக் கொண்டே இருந்தால் அது தொல்லையை அதிகப்படுத்திக் கொண்டே போகும். அதன் மேல் நீ ஒருமுகப்பட்டால் அது பூதாகரம் ஆகும். – ஸ்ரீ அன்னை
பயம் என்பது மறைமுகமான சம்மதம் ஆகும். நீ ஏதாவது ஒன்றைப் பற்றி பயப்படுகிறாய் என்றால், அதற்கு நீயே மறைமுகமாய் சம்மதிக்கிறாய் என்று பொருள். அதன் மூலம் அதன் கரத்திற்கு வலுவூட்டுகிறாய். இதனை ஆழ்மனச் சம்மதம் என்று […]
உலகமே துயரங்களாலும் துன்பங்களாலும் நிரம்பியது. வேறு எந்த ஒரு கூடுதலானதுயரத்திற்கும் காரணமானவராக இருக்க எப்போதுமே ஒருவர் முயற்சி செய்யக்கூடாது. – ஸ்ரீ அன்னை
துயரத்தை ஆதரிக்காதே. துயரம் எல்லாம் உன்னைவிட்டு ஒரேயடியாகப் போய்விடும். தவிர்க்க முடியாத ஒன்றல்ல துயரம். துயரமற்ற நிலைத்த உற்சாகமான அமைதியான மனநிலை யில்தான் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகிறது. செயா. – ஸ்ரீ அன்னை
பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே இறைவன்தான். இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை. இறைவன் ஒருவன்தான் இருக்கிறாள். நம்மை பயமுறுத்துவதற்காகத் தோன்றுவது எல்லாம் இறைவனின் சிறிய பொருளற்ற மாறுவேடங்கள் தான். – ஸ்ரீ அன்னை