ஸ்ரீ அரவிந்தர்

June 8, 2023

சிந்தனைப் பொறிகள்

எது தீது, எது நன்று என்பதை நான் மறந்துவிட் டேன்; இறைவனையும், இப்புவியில் அவன் புரியும் திருவிளையாடலையும், மனிதவினத்தில் இயங்கும் அவனது சங்கற்பத்தையும் மட்டுமே நான் காண்கி றேன். – ஸ்ரீ அரவிந்தர்
March 24, 2023

சிந்தனைப் பொறிகள்

பிறர் துன்புறுவதைக் காணும்போது நான் வருத்தமடைகிறேன். ஆனால் எனதல்லாத ஒரு விவேகம், அந்தத் துன்பத்தால் வரவிருக்கும் நன்மை யைக் காண்கிறது, அதை ஏற்றுக்கொள்கிறது. – ஸ்ரீ அரவிந்தர்
March 23, 2023

சிந்தனைப் பொறிகள்

இன்னலைக் கண்டு வாட்டமுற்று தான் அதைத் தீயது என்னும்போது, அல்லது நான் பொறாமைப் பட்டு மனமுடையும்போது, நித்திய மடையன் என் னுள் விழித்தெழுந்துவிட்டான் எனபதை நான் அறிந்துகொள்கிறேன். – ஸ்ரீ அரவிந்தர்
March 22, 2023

சிந்தனைப் பொறிகள்

கடவுள் ஒர் அடியின் வாயிலாக எனக்கு நன்மை யளித்தார். “அனைத்தும் வல்லவனே, நீ இழைத்த துன்பத்திற்கும் கொடுமைக்கும் உன்னை மன்னிக்கி றேன், ஆனால் மீண்டும் அப்படிச் செய்யாதே” என்றா நான் கூறுவது? – ஸ்ரீ அரவிந்தர்
March 21, 2023

சிந்தனைப் பொறிகள்

மனிதக் கரம் கொண்டு கடவுள் என்னை அடித் தார்; “இறைவா. உன் ஆணவத்தை நான் மன்னிக் கிறேன்” என்றா நான் கூறுவது? – ஸ்ரீ அரவிந்தர்
March 20, 2023

சிந்தனைப் பொறிகள்

கடவுள் என் கண்களைத் திறந்துவிட்டார்; இழி யோரின் பெருந்தன்மையையும், வெறுப்பூட்டுவோ ரின் கவர்ச்சியையும், ஊனமுற்றோரின் முழுமை யையும், அருவருப்பானவரின் அழகையும் நான் கண்டேன். – ஸ்ரீ அரவிந்தர்
March 19, 2023

சிந்தனைப் பொறிகள்

தற்செயலான நிகழ்ச்சி என்பது இப்பிரபஞ்சத் தில் இல்லை; மாயை என்னும் கருத்தும் ஒரு மாயையே. ஒர் உண்மையைத் திரித்து மறைக்கும் வடிவமாக இல்லாத மாயை எதுவும் மனித மனத்தில் இதுகாறும் இருந்ததில்லை. – ஸ்ரீ அரவிந்தர்
March 18, 2023

சிந்தனைப் பொறிகள்

நான் பகுத்தறிவைக் கொண்டிருந்த போது பல பொருட்களிலிருந்து வெறுப்புற்று விலகினேன். பகுத்தறிவை இழந்து நான் பார்வையைப் பெற்ற பின், அருவருப்பானவற்றை, வெறுப்பூட்டுபவற்றை உலகெங்கும் தேடியலைந்தேன், ஆனால் அவற்றை எங்கும் கண்டிலேன். – ஸ்ரீ அரவிந்தர்
March 17, 2023

சிந்தனைப் பொறிகள்

தற்காலச் சொல்வீரர் பலரைப் போல் நெடுஞ் சொற்களால் உன் சிந்தனையை நெரித்து அழிக் காதே வாய்ப்பாடுகள், பகட்டுரைகளின் வசியத் தால் மனத்தின் அறிவுநாட்டத்தை மயக்கி உறங்கச் செய்யாதே. தேடு, எப்போதும் தேடு. அவசரப் பார் வைக்குத் […]