ஸ்ரீ அன்னை

June 1, 2022
ஸ்ரீ அன்னை

கெட்ட சக்தி

எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருக்காதே. நீ முணுமுணுக்கும்போது எல்லாவிதமான கெட்ட சக்திகளும் உன்னுள்ளே நுழைந்து உன்னைக் கீழே தள்ளிவிடுகின்றன. மகிழ்வாய்ப் புன்னகை செய்து கொண்டே இரு. – ஸ்ரீ அன்னை
May 31, 2022
Sri Aurobindo and The Mother

குறை

முழுமையின் பாதையில் முன்னேற விரும்புகிறவன் வழியில் எதிர்ப்படும் இடையூறுகள் பற்றிக் குறை கூறக்கூடாது. ஏனெனில் ஒவ்வொரு இடையூறும் ஒரு புதிய முன்னேற்றத்திற்குத்தான். குறை சொல்வது பலவீனத்திற்கும் நேர்மையின்மைக்கும் அறிகுறி ஆகும். – ஸ்ரீ அன்னை
May 29, 2022
ஸ்ரீ அன்னை

மின்னேற்றம்

எப்போதும் நம்மை முன்னேற்றம் அடையச் செய்வதற்கே இடையூறுகள் வருகின்றன. பெரிய இடையூறு என்றால் பெரிய முன்னேற்றம் இருக்கும். நம்பிக்கையுடன் இரு. துன்பத்தைத் தாங்கிக்கொள். – ஸ்ரீ அன்னை
May 28, 2022
ஸ்ரீ அன்னை

நம்பிக்கை

நம்பிக்கையுடன் இரு. நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்.அதாவது முன்னோக்கிப் பெரிய அடியை நீ எடுத்து வைப்பாய். – ஸ்ரீ அன்னை  
May 27, 2022
ஸ்ரீ அன்னை

உண்மை

ஆன்மிக விருப்பம் உள்ளவர்க்கும் சாதகர்க்கும் அவர் வாழ்வில் வரும் ஒவ்வொன்றும் அவர் உண்மையை அறியவும் அதுவாக வாழவும் துணை செய்யும். – ஸ்ரீ அன்னை
May 26, 2022
ஸ்ரீ அன்னை

இடையூறுகள்

இடையூறுகள் வருகின்றன. ஏனெனில் உன்னில் அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வாழ்வில் எல்லாமே சுலபமானதாகப் போய்விட்டால் பிறகு அது ஒன்றுமே இல்லாத வெறுமையான வாழ்க்கையாகப் போய்விடும். இடையூறுகள் உனக்கு வருவதனால் அதை  தகர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் உன்னிடம் இருப்பதையே […]
May 25, 2022
ஸ்ரீ அன்னை

பலவீனம்

நம்முள்ளே ஒளிந்திருக்கும், வெற்றி கொள்ளப்பட வேண்டிய பலவீனங்களை வெளிப்படுத்தவே எப்போதும் சூழ்நிலைகள் அமைகின்றன. – ஸ்ரீ அன்னை
May 24, 2022
ஸ்ரீ அன்னை

தெய்வீக வாழ்க்கை

தெய்வீக வாழ்க்கையை நம்புகிற ஒருவனைக் குருட்டுத்தனமான அறிவற்ற மனித சமுதாயத்தினரின் செயல்கள் எல்லாம் என்ன செய்துவிட முடியும்? – ஸ்ரீ அன்னை
May 23, 2022
ஸ்ரீ அன்னை

பாடம்

நடக்கின்ற எல்லா நிகழ்வுகளும் நமக்குத் தேவையான ஏதோ ஒரு பாடத்தைக் கொடுக்கவே நடப்பதாக நாம் முழுமையாக நம்ப வேண்டும். நாம் நம்முடைய சாதனையில் நேர்மையானவராய் இருப்பின் அந்த பாடத்தை மகிழ்வுடனும் நன்றியுடனும் ஏற்றுக் கொள்ளவேண்டும். – […]