ஸ்ரீ அன்னை

September 6, 2022
ஸ்ரீ அன்னை

மனசோர்வு

மனச்சோர்வின் மேல் கவனம் செலுத்த வேண்டாம். அது இல்லாதது போலச் செயல்படுங்கள். – ஸ்ரீ அன்னை
September 4, 2022
ஸ்ரீ அன்னை

குணம்

வீட்டை மாற்றுவதன் மூலம் உங்களால் குணத்தை மாற்றிவிட முடியாது. உங்கள் குணத்தை மாற்றி னால், உங்கள் சூழலை மாற்றத் தேவையில்லை. – ஸ்ரீ அன்னை
September 3, 2022
ஸ்ரீ அன்னை

மாற்றம்

ஒருவருக்கு வெளிப்படையான மாற்றம் தேவைப்படுகிறது என்றால் அவர் உள்முகமாக முன்னேறவில்லை என்று பொருள். ஏனெனில் யார் உள்முகமாக முன்னேறுகிறாரோ அவரால் அதே வெளிப்புறச் சூழ்நிலைகளில் வாழ முடியும். அச்சூழல்கள் அவருக்குப் புதிய உண்மைகளை வெளிப்படுத்திக் கொண்டே […]
September 2, 2022
ஸ்ரீ அன்னை

முக்கியத்துவம் கொடு

இறந்தகாலத்தை வருங்காலத் தயாரிப்புக்கு ஏற்ற பாடமாக்கி எதை உணரவேண்டுமோ அதை உணர்வதற்கும் எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்வதற்கும் முக்கியத்துவம் கொடு. – ஸ்ரீ அன்னை
September 1, 2022
ஸ்ரீ அன்னை

உள்முக மாற்றமே தேவை

மக்கள் அவர்களுடைய நிலை, சூழ்நிலைகளைப் பொறுத்து என நினைக்கின்றனர். ஆனால் அதெல்லாம் பொய்மையானது. ஒரு சிலர் தமக்கு நரம்புக் கோளாறு’ என்றால் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அவருடைய நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்று நினைக்கின்றனர். […]
August 31, 2022
அன்னை தர்ஷன்

செயல்

அவரவர் செயல்களுக்கான விளைவுகளை அவரவரே ஏற்படுத்திக் கொள்கின்றனர். – ஸ்ரீ அன்னை
August 30, 2022
ஸ்ரீ அன்னை

உன்னால் சுலபமாகச் செய்ய முடியும்

இது செய்வதற்கு ஒன்றும் பெரிய கடினமான விஷயம் அன்று. உன்னால் சுலபமாகச் செய்ய முடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
August 29, 2022
ஸ்ரீ அன்னை

மாற்றம்

ஒரு மாற்றம் தேவைப்படுகிறது என உணர்வாய் எனில், அது உன் மனப்பான்மையில் இருக்க முடியும். – ஸ்ரீ அன்னை
August 28, 2022
ஸ்ரீ அன்னை

மனநிறைவு

மனநிறைவு என்பது நம் புறச் சூழ்நிலைகளைப் பொறுத்தது அன்று. அகநிலையைப் பொறுத்தது ஆகும். – ஸ்ரீ அன்னை