ஸ்ரீ அன்னை

September 17, 2022
ஸ்ரீ அன்னை

நிச்சயமாக வரும்

எது உண்மையில் தேவைப்படுகிறதோ, அது நிச்சயமாக வரும். – ஸ்ரீ அன்னை
September 16, 2022
ஸ்ரீ அன்னை

சோம்பல்

நிச்சயமாக சோம்பல் உணர்வு நல்லதல்ல. ஆனால் தெய்வீக உணர்வுக்கு நம்மைச் சமர்ப்பணம் செய்வதன் மூலம் சோம்பலை மாற்ற முடியும். – ஸ்ரீ அன்னை
September 15, 2022
ஸ்ரீ அன்னை

உள்முகமாகத் திரும்பு

கிளர்ச்சியூட்டக் கூடிய செயலில் ஒருவர் தன்னை இழத்தலைவிட உள்முகமாகத் திரும்பி சக்தியைப் பெறுதல் மிகவும் உதவிகரமானதாகும். – ஸ்ரீ அன்னை
September 14, 2022
ஸ்ரீ அன்னை

ஆர்வத்துடன் இரு

நீ எதைச் செய்தாலும் அதில் ஆர்வத்துடன் இரு,மிகமிக அற்பமான வேலைகூட நீ எடுத்துக் கொள்ளும் முறையில் சுவாரசிய மிக்கதாய் விடும். மிகுந்த கவர்ச்சியான முக்கியமான செயல்பாடுகூட இலட்சிய முழுமைக்கான முன்னேற்றத்திற்கு விருப்பம் இல்லை எனில் சுவாரசியம் […]
September 11, 2022
ஸ்ரீ அன்னை

சோர்வு

நீ செய்யும் செயல்களை ஆர்வமின்றிச் செய்வதனால் சோர்வு வருகிறது. நீ எதைச் செய்தாலும் அதை முன்னேறுவதற்கான வழியாக நினைத்துச் செய்தால், அதில் ஓர் ஆர்வத்தைக் காண முடியும். – ஸ்ரீ அன்னை
September 10, 2022
ஸ்ரீ அன்னை

உருமாற்றம்

புயலுக்குப் பின்னே உள்ள சக்திகள் தீமையானவை அல்ல. ஆனால் உருமாற்றம் செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவை. – ஸ்ரீ அன்னை
September 9, 2022
ஸ்ரீ அன்னை

முயற்சி செய்ய வேண்டும்

நீ செய்வதை மேலும் மேலும் செம்மையாகச் செய்ய முயற்சி செய்ய வேண்டும். நீ செய்வது எதுவாக இருந்தாலும் முன்னேற்றத்திற்கான விருப்பம் எப்போதும் இருக்க வேண்டும். – ஸ்ரீ அன்னை
September 8, 2022
ஸ்ரீ அன்னை

யோகத்தின் எதிரி

மனச்சோர்வு காரணமே இல்லாமல் வரக்கூடியது ஆகும். அது எதற்குமே வழி வகுக்காது. யோகத்தின் சூட்சுமமான எதிரியே மனச்சோர்வுதான். – ஸ்ரீ அன்னை
September 7, 2022
ஸ்ரீ அன்னை

பணி

தான் என்னும் அகங்காரம்தான் சோர்வடைகிறது. அதை இலட்சியம் செய்ய வேண்டாம். உன்பணியை அமைதியாக செய்து கொண்டிரு. மனச்சோர்வு மறைந்து போகும். – ஸ்ரீ அன்னை