எல்லாத் தொல்லைகளும், நிதானக் குறைவினாலேயே வருகின்றன. எனவே எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், நாம் கவனமாக, நிதானம் தவறாமல் இருப்போம். – ஸ்ரீ அன்னை
சொற்போருக்கு விரைவோனே! நீ ஒரு வாதத் தில் வெற்றி வாகை சூடும்போது. அந்தோ பரி தாபம், உன் அறிவை விரிவாக்கும் ஒரு வாய்ப்பை இழந்தன்றோ நிற்கிறாய்! – ஸ்ரீ அரவிந்தர்
இன்னலைக் கண்டு வாட்டமுற்று தான் அதைத் தீயது என்னும்போது, அல்லது நான் பொறாமைப் பட்டு மனமுடையும்போது, நித்திய மடையன் என் னுள் விழித்தெழுந்துவிட்டான் எனபதை நான் அறிந்துகொள்கிறேன். – ஸ்ரீ அரவிந்தர்