Words of Mother

May 31, 2024

அன்னையின் மந்திரங்கள்

பிரபஞ்ச வெளிப்பாட்டில் ஏற்படும் ஒவ்வொரு புதிய முன்னேற்றமும், ஒரு புதிய சிருஷ்டிக்கான சாத்தியக் கூறு ஆகும். – ஸ்ரீ அன்னை
May 30, 2024

அன்னையின் மந்திரங்கள்

இன்று நாம் அனுபவபூர்வமாக உணர இயலாதவையை நாளை உணர முடியும். பொறுமையுடன் இருப்பதொன்றே தேவை. – ஸ்ரீ அன்னை
May 29, 2024

அன்னையின் மந்திரங்கள்

பாதையை அறியும்போது அதில் நடந்து செல்வது எளிது. – ஸ்ரீ அன்னை
May 28, 2024

அன்னையின் மந்திரங்கள்

ஒவ்வொரு மனிதனிடமும், விலங்கினத்தின் குணம் பதுங்கி இருக்கிறது. அது தன்னை வெளிப்படுத்த, கவனக்குறைவான தருணத்தை எதிர்பார்க்கிறது. இடையறா விழிப்பு நிலையே இதற்கு மருந்தாகும். – ஸ்ரீ அன்னை
May 27, 2024

அன்னையின் மந்திரங்கள்

இறைவனின் அருள் நம்முடனே இருக்கின்றது. புறத்தோற்றங்கள் இருண்டபோதிலும் அது நம்மை விட்டு அகலுவதில்லை. – ஸ்ரீ அன்னை
May 26, 2024

அன்னையின் மந்திரங்கள்

இருள் செறிந்த நாட்களில் நம்பிக்கையே நிச்சயமான வழிகாட்டியாம். – ஸ்ரீ அன்னை
May 24, 2024

அன்னையின் மந்திரங்கள்

ஸ்ரீ அரவிந்தர் எப்போதும் நமக்கு ஒளியூட்டிக்கொண்டும், வழிகாட்டியவாறும், நம்மைப் பாதுகாத்தபடியும் நம்முடனே இருக்கிறார். அவரது பெருங்கருணைக்கு முழு நம்பிக்கையின் மூலமாக நாம் பிரதி செய்வோமாக.  
May 23, 2024

அன்னையின் மந்திரங்கள்

அதிமானிட உண்மைக்கும் ஒளிக்கும் சேவை செய்யவும், அவை நம்முள்ளும், இப்புவியிலும் வெளிப்பட முன்னேற்பாடுகள் செய்யவும் தான் நாம் இங்கே இருக்கிறோம் என்பதை எக்காலமும் மறக்கலாகாது. – ஸ்ரீ அன்னை
May 22, 2024

அன்னையின் மந்திரங்கள்

இறையுணர்வே உண்மையான துணை. அதுவே உண்மையான மகிழ்ச்சியுமாம். – ஸ்ரீ அன்னை