அன்னையின் மந்திரங்கள்

May 16, 2024
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

பொருட்களின் வெளித் தோற்றத்துக்குப் பின்னால் பூரணமான உணர்வு என்னும் கடல் இருக்கின்றது. அதில் எப்போதும் நாம் மூழ்கலாம். – ஸ்ரீ அன்னை  
May 15, 2024

அன்னையின் மந்திரங்கள்

பல யுகங்களின் தீவிர ஆர்வம்தான் நம்மை இங்கு இறைவனது வேலைக்கு கொண்டு வந்திருக்கிறது. – ஸ்ரீ அன்னை
April 17, 2024

அன்னையின் மந்திரங்கள்

ஒருவரது இதயத்தில் குடிகொண்டிருக்கும் ஆதியந்தமிலாத இறைவாஸ உணர்வுக்கு ஈடான மகிழ்ச்சி வேறெதுவுமில்லை. – ஸ்ரீ அன்னை
July 9, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

அதிமானிட உண்மைக்கும் ஒளிக்கும் சேவை செய்யவும், அவை நம்முள்ளும், இப்புவியிலும் வெளிப்பட முன்னேற்பாடுகள் செய்யவும் தான் நாம் இங்கே இருக்கிறோம் என்பதை எக்காலமும் மறக்கலாகாது. – ஸ்ரீ அன்னை
July 8, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

எக்காலும் உண்மையே பேசுவதைவிட பெரிய வீரம் வேறெதுவுமில்லை. – ஸ்ரீ அன்னை
July 7, 2023

அன்னையின் மந்திரங்கள்

நம் அவநம்பிக்கையே நம் குறைபாடுகளின் தோற்றுவாய். – ஸ்ரீ அன்னை
July 6, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

எல்லா சந்தேகங்களிலிருந்தும் விடுபட நாம் தீர்மானம் செய்யவேண்டும். அவை நம் முன்னேற்றத்தின் பெரும் எதிரிகள் ஆகும். – ஸ்ரீ அன்னை
July 5, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

நம் வாழ்க்கையின் சூழ்நிலைகளைப் பற்றிக் குறை கூறுவது எப்போதும் தவறாகும். அவை நம் அகநிலையின் புற வெளிப்பாடேயாகும். – ஸ்ரீ அன்னை
July 4, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

மனநிறைவு என்பது வெளிப்புறச் சூழ்நிலைகளைச் சார்ந்தது அல்ல. அது உள்நிலையைப் பொறுத்தது. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை