Words of Mother

July 6, 2024

அன்னையின் மந்திரங்கள்

(நமது) தனித்தன்மை உருவாகிய பின்னர், நம்மை இறைவனுக்கு அர்பணித்துக் கொள்வதற்கும், சரணடைவதற்கும் மீண்டும் எவ்வளவு முயற்சிகள், போராட்டங்கள் மேன்மேலும் தேவையாகின்றன! – ஸ்ரீ அன்னை
July 5, 2024

அன்னையின் மந்திரங்கள்

மனித அறிவின் ஆற்றல் அளவற்றது. ஒருமுனைப்படுவதின் மூலம் அது அதிகரிக்கிறது. அதுவே இரகசியம். – ஸ்ரீ அன்னை
July 4, 2024

அன்னையின் மந்திரங்கள்

இறைவனில், இறைவனால் யாவும் உரு மாற்றமும் மேன்மையும் அடைகின்றன. புலப்படாத விஷயங்கள் யாவற்றிற்கும் எல்லா சக்திகளுக்கும் திறவுகோல் இறைவனிடம் உள்ளது.’ – ஸ்ரீ அன்னை
July 3, 2024

சிந்தனைப் பொறிகள்

அமைதியிலும், மோனத்திலும் நித்தியன் வெளிப்படுகிறான். எதனாலும் பாதிக்கப் படாமலிரு. நித்தியன் வெளிப்படுவான். – ஸ்ரீ அன்னை
July 2, 2024

சிந்தனைப் பொறிகள்

இறைவனின் சாந்நித்யம் நமக்கு முடிவான, நிலையான, மாறாத உண்மையாகும். – ஸ்ரீ அன்னை
July 1, 2024

சிந்தனைப் பொறிகள்

இறைவனின் அமைதி நம் இதயங்களில் இடையறாது உறைதல் வேண்டும். – ஸ்ரீ அன்னை
June 23, 2024

அன்னையின் மந்திரங்கள்

எல்லா வாழ்வின் ரசமாகவும் எல்லாச் செயல்களின் காரண கர்த்தாவாகவும், நம் எண்ணங்களின் இலக்காகவும் இருப்பவன் இறைவன். – ஸ்ரீ அன்னை  
June 22, 2024
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

வேளை வந்து விட்டது” என்று இறைவன் கூறிவிட்டான். எனவே எல்லாத் தடைகளையும் தாண்டி விடலாம். – ஸ்ரீ அன்னை
June 22, 2024

அன்னையின் மந்திரங்கள்

இறைவனுக்குப் புறம்பான அனைத்தும் பொய்மையும், பிரமையும், துயர் மிகுந்த அறியாமையும் ஆகும். – ஸ்ரீ அன்னை