ஜூன் 12 இறை சக்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் காத்திருக்கிறது. அது எந்த புது வடிவங்களின் மூலமாக வெளிப்படமுடியும் என்று நாம் கண்டறிய வேண்டும். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
ஜூன் 8 மெய்யார்வத்துடன் நீ இறைவனிடம் ” எனக்கு நீ மட்டுமே வேண்டும்” என்று சொல்வாயானால், நீ நேர்மையாக இருந்தே ஆக வேண்டிய சூழ்நிலைகளை இறைவன் உனக்கு ஏற்படுத்துவான். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
ஜூன் 8 பின்னோக்கிப் பார்க்காதே. எப்போதும் முன்னோக்கிப் பார். நீ என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அதைப் பார் — நிச்சயமாக முன்னேறுவாய். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை