புழுதியிற் புரளும் குழந்தையொன்றைக் கண் டேன்; அதே குழந்தை தன் தாயால் நீராட்டப் பெற்று ஒளிரக் கண்டேன். இருமுறையும் அக் குழந்தையின் மாசற்ற தாய்மையின் முன் நடுங்கி நின்றேன். – ஸ்ரீ அரவிந்தர்
எது தீது, எது நன்று என்பதை நான் மறந்துவிட் டேன்; இறைவனையும், இப்புவியில் அவன் புரியும் திருவிளையாடலையும், மனிதவினத்தில் இயங்கும் அவனது சங்கற்பத்தையும் மட்டுமே நான் காண்கி றேன். – ஸ்ரீ அரவிந்தர்
நெப்போலியனை ஒரு கொடுங்கோலன் என்றும், கொலைகாரச் சக்கரவர்த்தி என்றும் எவரோ வருணித்தார்; ஆனால், போர்க்கோலம் பூண்டு ஐரோப்பாவில் வெற்றிநடையிட்ட கடவுளையே நான் கண்டேன். – ஸ்ரீ அரவிந்தர்
இறைவன் அன்புடையவனாக இருப்பதனால் தான் அவன் பெருங் கொடியவனாக இருக்கிறாள். இது உனக்குப் புரியவில்லை, ஏனெனில் நீ கண்ண னைக் கண்டதில்லை, அவனுடன் விளையாடியதில்லைல. ஸ்ரீ அன்னை