ஸ்ரீ அன்னை

August 20, 2021
ஸ்ரீ அன்னை

நோய் மற்றும் பலம்

உன் உடலில் இன்னும் அதிக சாந்தியையும் அமைதியையும் நிலைநாட்டு. அது நோய் தாக்குதல்களை எதிர்க்கும் பலத்தை உனக்குக் கொடுக்கும். – ஸ்ரீ அன்னை
August 18, 2021
ஸ்ரீ அன்னை

பற்றுதல்

தெய்வ சங்கற்பத்தில் நமக்கு உள்ள பற்றுதல் பூரணமாக இருக்கும்பொழுது, நம்முடைய அமைதியும், மகிழ்ச்சியும் முழுமை பெறுகின்றன. – ஸ்ரீ அன்னை
August 17, 2021
ஸ்ரீ அன்னை

பாதை

பாதையை அறியும்போது அதில் நடந்து செல்வது எளிது. – ஸ்ரீ அன்னை
August 16, 2021
ஸ்ரீ அன்னை

நம்பிக்கை

இருள் செறிந்த நாட்களில் நம்பிக்கையே நிச்சயமான வழிகாட்டியாம். – ஸ்ரீ அன்னை
August 15, 2021
ஸ்ரீ அன்னை

பிறந்ததின செய்தி

ஒரு பிறந்ததின செய்தி இந்த உன்னுடைய பிறந்த நாள் இறைவனுக்கு உன்னை மேன்மேலும் அளிப்பதற்கான வாய்ப்பாக ஆகட்டும். உனது அர்ப்பணம் முழுமையடையட்டும், உனது பக்தி தீவிரமடையட்டும், உனது ஆர்வம் உயர்ந்தோங்கட்டும். – ஸ்ரீ அன்னை
August 13, 2021
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள் – வடிவங்கள்

புதிய கருத்துக்களை வெளிப்படுத்த புதிய சொற்கள் தேவையாவதுபோல் புதிய சக்திகளை வெளிப்படுத்த புதிய வடிவங்கள் தேவை. – ஸ்ரீ அன்னை
August 11, 2021
ஸ்ரீ அன்னை

உடல் நலம்

உடல் நலத்திற்கு நரம்புகளில் அமைதி இன்றியமை யாதது. – ஸ்ரீ அன்னை
August 8, 2021
ஸ்ரீ அன்னை

அன்னையின் ஆலோசனை

எளிமையாய் இரு மகிழ்ச்சியாய் இரு அமைதியாய் இரு உனது வேலையை உன்னால் முடிந்தவரை நன்றாகச் செய், உன்னை எப்பொழுதும் என்னை நோக்கி – திறவாய் வைத்திரு. இவை மட்டுமே உன்னிடம் கோரப்படுவது. – ஸ்ரீ அன்னை
August 7, 2021
ஸ்ரீ அன்னை

விடாமுயற்சி

விடாமுயற்சி இங்கு எல்லாவற்றிலும் அதிக முக்கியமான குணம் விடாமுயற்சி, நீடித்து உழைக்கும் திறன். – ஸ்ரீ அன்னை