ஸ்ரீ அன்னை

August 30, 2021
ஸ்ரீ அன்னை

மூளை

உங்கள் மூளை தன்னை விரிவுபடுத்தி சரியான நேரத்தை கொடுத்தால் உங்களால் புரிந்து கொள்ள முடியாதது எதுவுமில்லை. – ஸ்ரீ அன்னை
August 29, 2021
ஸ்ரீ அன்னை

இருள்

இவ்வுலகைப் பெரும் இருள் கவிந்து உள்ளது. அதிமானுட வெளிப்பாடு ஒன்றுதான் அதை அறவே நீக்க முடியும். – ஸ்ரீ அன்னை
August 28, 2021
ஸ்ரீ அன்னை

தியானம்

ஒருவன் தியானத்தின் மூலம் முன்னேற முடியும். ஆனால் நேர்மையாகச் செய்யப்படும் கர்மயோகத்தால் பத்து மடங்கு முன்னேற முடியும். – ஸ்ரீ அன்னை
August 27, 2021
ஸ்ரீ அன்னை

சாந்தி

உள்ளே ஆழத்தில் ஒரு சாந்தி உள்ளது. அதைப் பற்றிக் கொண்டு அதை உடலின் உயிரணுக்களுக்குள் செலுத்து. சாந்தி வந்துவிட்டால் ஆரோக்கியமும் வந்துவிடும். – ஸ்ரீ அன்னை
August 25, 2021
ஸ்ரீ அன்னை

சச்சரவு

நீ பிறருடன் சச்சரவிடத் தொடங்கினால் அது இறைப் பணிக்கு எதிராக நீ போர் தொடங்குவதாகும். – ஸ்ரீ அன்னை
August 24, 2021
ஸ்ரீ அன்னை

உண்மை

உண்மை உனக்குள்ளேயே இருக்கின்றது. நீ அதை உணர அதனை விரும்ப வேண்டும். – ஸ்ரீ அன்னை
August 23, 2021
ஸ்ரீ அன்னை

இறைவனின் பணி

இறைவனின் பணிக்கு ஒரு பூரணமான கருவியாக இருந்திட நாம் தொடர்ந்து ஆர்வமுறுவோமாக. – ஸ்ரீ அன்னை
August 22, 2021
ஸ்ரீ அன்னை

நம்பிக்கை

தளராத நம்பிக்கை நமக்கு உள்ள வழித்துணை. – ஸ்ரீ அன்னை
August 21, 2021
ஸ்ரீ அன்னை

அறியாமை

இவ்வுலகம் இன்னும் அறியாமையினாலும் பொய்மையினாலும் ஆளப்பட்டு வருகிறது. எனினும் உண்மை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. – ஸ்ரீ அன்னை