ஸ்ரீ அன்னை

October 1, 2021
ஸ்ரீ அன்னை

முன்னேற்றம்

நீ எப்படி இருந்தாய் என்பதைப் பற்றி கவலைப் படாதே. எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை. நீ நிச்சயமாக முன்னேறுவாய். – ஸ்ரீ அன்னை
September 30, 2021
ஸ்ரீ அன்னை

முன்னோக்கிப் பார்

பின்னோக்கிப் பார்க்காதே எப்போதும் முன்னோக்கிப் பார். நீ என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அதைப் பார் – நிச்சயமாக முன்னேறுவாய். – ஸ்ரீ அன்னை
September 29, 2021
ஸ்ரீ அன்னை

மனிதன்

இப்போதுள்ள நிலைக்கும், இனி அடைய வேண்டிய நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளவன் மனிதன். – ஸ்ரீ அன்னை
September 28, 2021
ஸ்ரீ அன்னை

உலகம்

இந்த உலகம் சச்சரவுகளாலும், துயரங்களாலும், சிரமங்களாலும் உருவாக்கப்பட்டது. இது இன்னும் மாறவில்லை. மாறுவதற்கு நெடுநாள் பிடிக்கும். இதிலிருந்து வெளியேற ஒவ்வொருவருக்கும் சாத்தியமுண்டு. இவற்றிலிருந்து மீள இறையருள் ஒன்றுதான் சிறந்த வழி. – ஸ்ரீ அன்னை
September 27, 2021
ஸ்ரீ அன்னை

தூய்மை

அதிமன வெளிப்பாட்டிற்கு தவிர்க்கமுடியாத முதல்படி தூய்மை. – ஸ்ரீ அன்னை
September 26, 2021
ஸ்ரீ அன்னை

பாதை

பாதை நீண்டது, ஆனால் சுய-சரணடைதல் அதை குறுகியதாக்குகிறது; வழி கடினமானது, ஆனால் சரியான நம்பிக்கை அதை எளிதாக்குகிறது. – ஸ்ரீ அன்னை
September 25, 2021
ஸ்ரீ அன்னை

அன்பின் உரிமை

அவர்கள் எப்போதும் அன்பின் உரிமைகளைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் அன்பின் ஒரே உரிமை தன்னையே கொடுக்கும் உரிமை மட்டுமே. – ஸ்ரீ அன்னை
September 24, 2021
ஸ்ரீ அன்னை

அர்ப்பணம்

யோகம் என்பது இறைவனுடன் ஒன்றிப்பதாகும். ஒருவன் தன்னை இறைவனுக்கு அர்ப்பணிப்பதால் இந்த ஒன்றிப்பு வருகிறது. சுய அர்ப்பணமே ஒன்றிப்பின் அடிப்படையாகும். – ஸ்ரீ அன்னை
September 23, 2021
ஸ்ரீ அன்னை

மன அமைதி

நேர்மையாகவும் உண்மையாகவும் இருங்கள், உங்கள் மனம் அமைதியாக இருக்கும். – ஸ்ரீ அன்னை