எல்லாத் தொல்லைகளும், நிதானக் குறைவினாலேயே வருகின்றன. எனவே எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், நாம் கவனமாக, நிதானம் தவறாமல் இருப்போம். – ஸ்ரீ அன்னை
உனது ஆன்மா என்னுடைய ஒரு பகுதி, நாம் ஒருவரையொருவர் நன்கு அறிவோம். உனக்கும் தீய சக்திகளை எப்படித் தவிர்ப்பது எனத்தெரியும், உன்னுடைய இலட்சியத்தை அடைவதற்கு போதுமான அறிவும் உனக்கு இருக்கிறது. – ஸ்ரீ அன்னை
உன்னுடைய முன்னேற்றத்திற்கும், நீ செய்யும் வேலைகளுக்கும் உனக்கு ஆதரவாக என்னுடைய உதவி எப்பொழுதும் இருக்கிறது. இன்று உன்னால் வெற்றிகொள்ள முடியாத இடர்களை, நாளையோ அல்லது அதன் பின்னரோ வெற்றி கொள்ள முடியும். – ஸ்ரீ அன்னை
மெய்யார்வத்துடன் நீ இறைவனிடம் “எனக்கு நீ மட்டுமே வேண்டும்” என்று சொல்வாயானால், நீ நேர்மையாக இருந்தே ஆக வேண்டிய சூழ்நிலைகளை இறைவன் உனக்கு ஏற்படுத்துவான். – ஸ்ரீ அன்னை