ஸ்ரீ அன்னை

November 14, 2021
ஸ்ரீ அன்னை

அன்பு

இறைவனின் அன்பு நமது இதயங்களில் தனி ஆணை செலுத்தும் எஜமானனாக உறையட்டும்; இறைவனது ஞானம் நமது எண்ணங்களைவிட்டு ஒருபோதும் அகலாது இருக்கட்டும். – ஸ்ரீ அன்னை
November 13, 2021
ஸ்ரீ அன்னை

விசுவாசம்

தோற்றங்களும், விதிகளும் மாறும். ஆனால் நமது விசுவாசமும், குறிக்கோளும் மாறா. – ஸ்ரீ அன்னை
November 12, 2021
ஸ்ரீ அன்னை

ஆர்வம்

ஒருமுகப்பட்ட திடசித்தத்துடன் நமது ஆர்வம் எப்போதும் ஒரே சீராக எழுகின்றது. – ஸ்ரீ அன்னை
November 11, 2021
ஸ்ரீ அன்னை

இறை வெளிப்பாடு

எப்பொழுதெல்லாம், எங்கெல்லாம் சாத்தியமோ, அப்பொழுதெல்லாம் இறைவன் புவியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். – ஸ்ரீ அன்னை
November 10, 2021
ஸ்ரீ அன்னை

ஊழியம்

நாம் எப்போதும் முழுமையாக இறைவன் ஒருவனுக்கே ஊழியம் செய்பவர்களாக இருக்கவேண்டும். – ஸ்ரீ அன்னை
November 9, 2021
ஸ்ரீ அன்னை

நம்பிக்கை

ஒவ்வொரு கணமும் முன்கூட்டியே கண்டுகொள்ள முடியாதவை, அறியப்படாதவை நம்முன் உள்ளன. நமக்கு என்ன நேர்கிறது என்பது பெரும்பாலும் நமது நம்பிக்கையின் தீவிரத்தையும் தூய்மையையும் பொறுத்ததாக இருக்கும். – ஸ்ரீ அன்னை
November 8, 2021
ஸ்ரீ அன்னை

அறிவொளி

இறைவன் மேன்மேலும் நமக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும், மேலும், மேலும், ஒளியூட்டவேண்டும், நம் அறியாமையை விரட்டி, நம் மனத்தில் அறிவொளியை ஏற்றவேண்டும் என்று நாம் பிரார்த்தனை செய்கிறோம். – ஸ்ரீ அன்னை
November 7, 2021
ஸ்ரீ அன்னை

சக்தி

இறைவனுடைய சர்வ வல்லமையுள்ள சக்தியில் உண்மையான, உயிருள்ள நம்பிக்கையும் முழு நிச்சயமும் நமக்கு இருக்குமானால், இந்தப் பூவுலகம் முழுவதையும் திருஉருமாற்றம் செய்யும் வகையில் இறைவனின் வெளிப்பாடு தெளிவாகிவிடும். – ஸ்ரீ அன்னை
November 6, 2021
ஸ்ரீ அன்னை

பிரபஞ்சம்

ஒவ்வொரு நிமிடமும் இந்தப் பிரபஞ்சம் அதன் மொத்த வடிவிலும், அதன் ஒவ்வொரு பாகத்திலும் மறுபடி புதிதாய் சிருஷ்டிக்கப்படுகிறது. – ஸ்ரீ அன்னை