ஸ்ரீ அன்னை

January 18, 2022
ஸ்ரீ அன்னை

ஒப்படைப்பு

ஏன், எப்படி என்றெல்லாம் கேட்காத, எதற்கும் கவலைப்படாத குழந்தையைப் போல், நாம் தெய்வ சங்கல்பம் நிறைவேறும்பொருட்டு இறைவனிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்திருப்போம். – ஸ்ரீ அன்னை
January 17, 2022
ஸ்ரீ அன்னை

புத்தொளி

இப்புவிமீது புத்தொளி ஒன்று பாயப்போகிறது. அது சத்தியப்பிழம்பாகும்; நல்லிணக்கத்தின் ஒளியாகும். – ஸ்ரீ அன்னை
January 16, 2022
ஸ்ரீ அன்னை

நம்பிக்கை

நாம் நம்பிக்கை இழந்து, இறைவனிடம் கதறும்போது, இறைவனின் பதில் தவறாமல் கிடைக்கிறது. – ஸ்ரீ அன்னை
January 15, 2022
ஸ்ரீ அன்னை

பணி

நாம் இறைவனின் பணி செய்பவர்களாக இருக்கிறோம். செயலைத் தீர்மானிப்பதும், இன்னாருக்கு இன்ன செயல் என்று) நியமிப்பதும், செயலைத் துவக்கி, இயக்கி, நிறைவேற்றி வைப்பதும் இறைவனே. – ஸ்ரீ அன்னை
January 14, 2022
ஸ்ரீ அன்னை

ஆன்மா

இறைவன் ஆன்மாவின் சிந்தனைக்கு எட்டாதவன்; ஆனால் அது அவனை நிச்சயமாக அறியும். – ஸ்ரீ அன்னை
January 13, 2022
ஸ்ரீ அன்னை

சுகம்

இறைவன் கலப்பற்ற மகிழ்ச்சியாகவும், ஆனந்தமான சுகமாகவும் இருக்கிறான். ஆனால் இந்த சுகம் முழுமையாக இருக்கும்போதுதான் பூரணமாகிறது. – ஸ்ரீ அன்னை
January 12, 2022
ஸ்ரீ அன்னை

பக்கபலம

நமக்கு பக்கபலமாகவும், நல்லாதரவாகவும், வழிகாட்டியாகவும் உள்ள இறைவனே, என்றும் நம்மைக் கைவிடாத உறுதியான நண்பன்; உ இருளைச் சிதறடிக்கும் ஒளியாகவும், வெற்றிக்கு உறுதிகூறும் மாவீரனாகவும் இருப்பதும். – ஸ்ரீ அன்னை
January 11, 2022
ஸ்ரீ அன்னை

பரமன்

பரமன் தெய்வீக அறிவாகவும் பூரண ஒருமையாகவும் உள்ளான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் அவனை அழைப்போமாக. அப்போது நாம் அவனைத்தவிர வேறொன்றும் இல்லையாக ஆவோம். – ஸ்ரீ அன்னை
January 10, 2022
ஸ்ரீ அன்னை

இறைவன்

இறைவனுடன் இரண்டறக் கலந்திருப்பவனுக்கு எங்கும் இறைவனின் பூரண இன்பம் கிட்டும்; அது, எவ்விடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் உடன் இருக்கும். – ஸ்ரீ அன்னை