ஸ்ரீ அன்னை

July 12, 2022

உள்முகமாக வாழ்

உள்முகமாக வாழ். புறச் சூழல்களால் கலக்கம் அடையாதே. இறைவனை இடைவிடாமல் விரும்பும் வேட்கையோடு உள்முகமாக வாழ்வது ஒன்றே வாழ்க்கையைப் புன்னகையோடு எதிர்கொள்ளும் சக்தியைக் கொடுக்கும். எந்தப் புறச் சூழ்நிலைகளிலும் அமைதியாய் இருக்கும் உறுதியைக் கொடுக்கும். – […]
July 11, 2022

இறை நினைவு

தெய்வத்தின் கரங்களில் நாம் ஓய்வு கொள்ளும் போது எல்லா இடையூறுகளும் தீர்ந்துவிடுகின்றன. ஏனென்றால் தெய்வத்தின் கரங்கள்தாம் எப்போதும் நம்மைப் பாதுகாக்க அன்புடன் திறக்கின்றன. எல்லாக் காரியங்களும் தவறாகப் போகும்போது சர்வ வல்லமை பொருந்திய இறைவனை நினைவில் […]
July 10, 2022

விழிப்புடன் இருக்க வேண்டும்

நம்மிடையே இறைவன் இருக்கிறான். நாம் அவனை நினைத்தால் எல்லாச் சூழ்நிலைகளையும் முழு அமைதியோடும் சமநிலையோடும் எதிர்கொள்வதற்கான சக்தியை அவன் தருவான். இறைவனின் இருப்பை உணர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களுடைய இடையூறுகள் எல்லாம் மறைந்துவிடும். – […]
July 9, 2022

ஓய்வு

உண்மைக்கு ஊழியம் செய்வதற்காக வாழ்பவன் புறச் சூழ்நிலைகளால் பாதிப்படைய மாட்டான். தெய்வத்தின் கரங்களில் நாம் ஓய்வு கொள்ளும். – ஸ்ரீ அன்னை
July 8, 2022

நீ வெற்றி பெறுவாய்

இடையூறுகள் எல்லாம் பலம் பொருந்தியவர்களுக்குத் தான். அவர்களை இன்னும் மாற்று வதற்குத்தான். விடாது முயற்சி செய் நிச்சயம் நீ வெற்றி பெறுவாய். – ஸ்ரீ அன்னை
July 7, 2022
ஸ்ரீ அன்னை

படிக்கட்டுகள்

தவறுகள்கூட முன்னேற்றத்திற்குப் படிக்கட்டுகள் ஆகும். குருட்டுத்தனமான தேடல்கள்கூட வெற்றிகள் ஆக மாறும். – ஸ்ரீ அன்னை  
July 6, 2022

தீர்வு

காரியங்கள் கடினமாகும்போது எல்லாம் அமைதி யாகவும் மெளனமாகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு இடையூறாக இருந்தாலும் நாம் உண்மையாக மெளனம் சாதித்தோமானால் தீர்வு நிச்சயம் வரும். – ஸ்ரீ அன்னை
July 5, 2022
ஸ்ரீ அன்னை

முன்னே செல்

தடைகள் ஒரு பொருட்டல்ல. இடையூறுகள், அவற்றை வெற்றி கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சியை உணர்வதற்காகவே தோன்றுகின்றன. முன்னே செல். நம்பிக்கையுடன் இரு. எல்லாம் சரியாகிவிடும். – ஸ்ரீ அன்னை
July 4, 2022
ஸ்ரீ அரவிந்தர்

பலம்

இடையூறுகள் எல்லாம் பலம் பொருந்தியவர்களுக்குத் தான். அவர்களை இன்னும் மாற்றுவதற்குத்தான். விடாது முயற்சி செய்.நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்.