அவரவர் விருப்பதற்கிணங்க செயல்பட ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால் அவரவர் செயல்களுக்குத் தக்க இயல்பான விளைவுகளை அவர்களால் தடுக்க இயலாது. – ஸ்ரீ அன்னை
சூழ்நிலைகள் என்பது கடந்தகாலச் செயல்களின் விளைவே. ஒவ்வொருவரும் அவராகவே உள்முகமாகவோ வெளிப்படையாகவோ ஏற் படுத்திக் கொண்ட சூழ்நிலைகளைத்தான் வாழ்வில் சந்திக்கிறார்கள் என்பதற்காக அனுதாபப்படுகிறேன். இதை உறுதியாக நம்புகிறேன். – ஸ்ரீ அன்னை
பொருள் சார்ந்த நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம். எப்போதும் அவை வேறு ஏதோ ஒன்றை வெளிப்படுத்த எழுந்த தாறுமாறான முயற்சிகள் ஆகும். அவை நாம் மேலெழுந்த வாரியாகப் புரிந்து கொள்ள முடியாதவை. – ஸ்ரீ […]