ஸ்ரீ அன்னை

April 18, 2023
ஸ்ரீ அரவிந்தர்

அன்னையின் மந்திரங்கள்

இன்று செய்ய முடியாததை பின்னொரு நாள் நிச்சயமாகச் செய்ய முடியும். முன்னேற்றத்துக்காக செய்யப்படும் எந்த முயற்சியும் ஒருபோதும் வீணாவதில்லை. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 17, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

எல்லாத் திரைகளும் விலகி எல்லோர் இதயங்களிலும் ஒளி முழுமையாக பிரகாசிக்கட்டும். எனது ஆசிகள் – ஸ்ரீ அன்னை
April 16, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

உடலைப் பொறுத்தவரை, செயலாற்றுந் திறனே அறிவாகும். பார்க்கப்போனால், தன்னால் செய்ய முடிவதை மட்டுமே உடல் அறிகிறது. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 15, 2023

அன்னையின் மந்திரங்கள்

எப்போதும் சரியான செயலை முறையாகச் செய்திட, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் நாம் ஆர்வமுற வேண்டும். எனது ஆசிகள் – ஸ்ரீ அன்னை
April 14, 2023

அன்னையின் மந்திரங்கள்

முன்னேற்றம் என்னும் ஒளிப்பிழம்பை நம் இதயத்தில் சுடர் விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருக்கச் செய்வோமாக. எனது ஆசிகள் – ஸ்ரீ அன்னை
April 13, 2023
ஸ்ரீ அரவிந்தர்

அன்னையின் மந்திரங்கள்

ஒவ்வொரு நாளும் காலையில் துயிலெழும்போது அந்த நாள் “பூரணமான சமர்ப்பணமாகுக” என பிரார்த்திப்போமாக. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 12, 2023

அன்னையின் மந்திரங்கள்

சாந்தமான அமைதியில் வலிமை புதுப்பிக்கப்படுகின்றது. எனது ஆசிகள் – ஸ்ரீ அன்னை
April 11, 2023

அன்னையின் மந்திரங்கள்

ஒவ்வொரு இதயத்திலும் இறைவனின் சாந்நித்யம் வருங்காலத்தில் த்தியமாகும் நிறைவிற்கு உறுதியாம். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 10, 2023

அன்னையின் மந்திரங்கள்

ஜூன் 15 எளிமையான விசுவாசமுள்ள இதயம் ஒரு மகத்தான வரப்பிரசாதம். எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை