ஸ்ரீ அன்னை

March 16, 2024
ஸ்ரீ அன்னை

வெள்ளை ரோஜாக்கள்

நம் ஒவ்வொருவர் ஆன்மாவும் வானுலக சுவர்க்கமும் ஒரே நேரத்தில் ஜனித்தவைகள். நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். நாம் தேவலோக தேவர்களுக்குச் சமமானவர்கள். – ஸ்ரீ அன்னை
March 15, 2024

வெள்ளை ரோஜாக்கள்

மனிதன் இறைவனின் இரண்டாவது பிரதி, நல்லதையும் அல்லாததையும் மாறி மாறி வழங்குவதில். – ஸ்ரீ அன்னை
March 14, 2024
ஸ்ரீ அன்னை

வெள்ளை ரோஜாக்கள்

ஜீவன் மண் தூசியிலும் ஒரு நிலையில் அளைகிறான். எப்படியாவது அற்புதத்தை எட்டி விடத் துடிக்கிறான். சடமோ ஆன்மாவோ ஆற்ற வேண்டுவதை அவன் அடையத் துடிக்கிறான். – ஸ்ரீ அன்னை
March 13, 2024

வெள்ளை ரோஜாக்கள்

நீ அமைதி அடை. அந்த அமைதியில் அன்னையைக் கண்டு உணர். – ஸ்ரீ அன்னை
March 12, 2024
ஸ்ரீ அன்னை

வெள்ளை ரோஜாக்கள்

பிறர் அகந்தையைக் கண்டு நீ அதிர்ச்சி அடைவது உன்னுள்ளே அகந்தை உணர்வு இருப்பதால்தான். – ஸ்ரீ அன்னை
March 11, 2024

வெள்ளை ரோஜாக்கள்

நான் வாழ்வின் செயல்களையும் யோகத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. வாழ்வே யோகமாக மலர்கிறது, செயல்களை உணர்வு பூர்வமாக இறைவனுக்கு சமர்ப்பணமாக்கும் போது, அவனுக்கே அவைகளை அர்ப்பணமாக்கும் போது. – ஸ்ரீ அன்னை 
March 10, 2024

வெள்ளை ரோஜாக்கள்

வாழ்வில் எல்லா கசப்பான சம்பவங்களும் அகந்தை நம்மிலிருந்து அகல மறுப்பதனால் தான் ஏற்படுகின்றன. – ஸ்ரீ அன்னை
March 7, 2024

வெள்ளை ரோஜாக்கள்

ஒரு அமைதியான இடைவேளை சில சமயங்களில் அவசியமாகிறது. – ஸ்ரீ அன்னை
March 6, 2024

வெள்ளை ரோஜாக்கள்

உங்கள் வாழ்வின் உண்மையான இலட்சியம் இறைவனுக்காக வாழ்வது தான் அல்லது அவன் அம்சமாக விளங்கும் உங்கள் உள்ளுறை ஆன்மாவுக்காக வாழ்வதற்கே. – ஸ்ரீ அன்னை