ஸ்ரீ அரவிந்தர்

April 30, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

மனிதரைச் சோதிப்பதென்னும் சுமையைக் கட வுள் தம்மீது ஏற்றுக்கொண்டிராவிடில், இவ்வுலகம் வெகு விரைவில் அழிந்துபோயிருக்கும். – ஸ்ரீ அரவிந்தர்
April 27, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

தீயவற்றின் கவர்ச்சியைக் காட்டிச் சோதிக்கும் போதுதான் கடவுள் மிக நன்றாக வழிநடத்துகிறார். கடுமையாகத் தண்டிக்கும்போதுதான் முழுமையாக அன்புசெலுத்துகிறார்; தீவிரமாக எதிர்க்கும்போது தான் மிகச் சிறந்த முறையில் உதவுகிறார். – ஸ்ரீ அரவிந்தர்
April 26, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

.”சமயம்” என்னும் பெயரின் கீழ் எவ்வளவு வெறுப்பையும் மடமையையும் மதிப்புடன் திரட்டிக் குவிப்பதில் மனிதர் வெற்றிகண்டுள்ளனர்! – ஸ்ரீ அரவிந்தர்
April 25, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

சமய அமைப்புகளின் கொடுமைக்கும், கோட் பாடுகளின் குறுகிய தன்மைக்கும் எதிராக எழும் இன்றியமையாத கண்டனக் குரலே நாத்திகமாகும். நாத்திகத்தைக் கல்லெனக் கொண்டு இறைவன் அந்த அழுக்கேறிய அட்டைவீடுகளைத் தகர்க்கிறான். – ஸ்ரீ அரவிந்தர்
April 24, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

உலகம் இதுவரை கண்ட வெற்றிகரமான புரட் சிகள் ஆறே; அவற்றுள்ளும் பெரும்பாலானவை கிட்டத்தட்ட தோல்விகளைப் போன்றே இருந்தன. இனால் இத்தகைய உயரிய பெருந் தோல்விகளின் வாயிலாகத்தான் மனிதகுலம் முன்னேறுகிறது. – ஸ்ரீ அரவிந்தர்
April 23, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

புரட்சிகள் கடந்தகாலத்தைக் கண்டதுண்ட மாய் வெட்டிக் கொதிகலத்தில் போடுகின்றன ; ஆனால் வெளிவருவதோ புதுமுகங் கொண்ட பழைய கிழவனே. – ஸ்ரீ அரவிந்தர்
April 22, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

கடந்தகால அமைப்புகளை உடைத்தெறி. ஆனால் அவற்றின் உயிர்த்தத்துவத்தையும் நல் விளைவுகளையும் பேணிவைத்துக்கொள்; இல்லை யேல் உனக்கு எதிர்காலம் ஏதுமில்லை. – ஸ்ரீ அரவிந்தர்
April 21, 2024
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

நேர்மையற்றவராய் நடந்துகொள்கின் றனர். ஆனால் இத்தாயின் கொலையைக் கண்டு அதிர்ச்சியுறத் தமக்கு எப்போதும் உரிமை உண் டென்று அவர்கள் எண்ணுகிறார்கள். – ஸ்ரீ அரவிந்தர்
March 8, 2024
ஸ்ரீ அன்னை

வெள்ளை ரோஜாக்கள்

மனிதனின் சுமை அவன்தன் இதய தாபங்களில் இருந்தும் அவன் ஜீவஸ்தல உணர்வுகளிலிருந்தும் வாழ்வில் பெரும்பாலான நிகழ்வுகளைத் தனக்குத் தானே சிருஷ்டித்துக் கொள்வதனால் தான் ஏற்படுகின்றது. – ஸ்ரீ அன்னை