ஸ்ரீ அன்னை

August 1, 2021
அன்னை தர்ஷன்

ஜாதகத்தை பற்றி – ஸ்ரீ அன்னை

உன்னுடைய ஜாதகத்தை காட்டிலும் பிரபுவை வலியவராக இருக்க விடக் கூடாதா? பரம பிரபுவை பொறுத்தமட்டில் மாற்ற முடியாத ஜாதகம் என்பதே இல்லை. பிரபுவின் தயையில் நம்பிக்கை கொள். அனைத்தும் மாறும்! – ஸ்ரீ அன்னை
April 24, 2021
ஸ்ரீ அன்னை

பாதை

பாதையை அறியும்போது அதில் நடந்து செல்வது எளிது. – ஸ்ரீ அன்னை
February 21, 2021
ஸ்ரீ அன்னை

இறை அருள்

இறைவனின் அருள் நம்முடனே இருக்கின்றது. புறத்தோற்றங்கள் இருண்டபோதிலும் அது நம்மை விட்டு அகலுவதில்லை. – ஸ்ரீ அன்னை
January 1, 2021
ஸ்ரீ அன்னை

இறைவனுக்கு நிவேதித்தல்

நீ செய்யும் வேலை, தனிப்பட்ட செயல்பாடுகள், மற்றவர்களுடனான உறவு என அனைத்தையும் இறைவனுக்கு நிவேதித்தாயானால் உன் வாழ்வனைத்தும் யோகமாக மாறிவிடும். – ஸ்ரீ அன்னை  
December 5, 2020
ஸ்ரீ அன்னை

விலங்கு குணம்

ஒவ்வொரு மனிதனிடமும், விலங்கினத்தின் குணம் பதுங்கி இருக்கிறது. அது தன்னை வெளிப்படுத்த, கவனக்குறைவான தருணத்தை எதிர்பார்க்கிறது. இடையறா விழிப்பு நிலையே இதற்கு மருந்தாகும். – ஸ்ரீ அன்னை
November 24, 2020
ஸ்ரீ அன்னை

சிருஷ்டி

பிரபஞ்ச வெளிப்பாட்டில் ஏற்படும் ஒவ்வொரு புதிய முன்னேற்றமும் ஒரு புதிய சிருஷ்டிக்கான சாத்தியக் கூறு ஆகும். – ஸ்ரீ அன்னை  
November 17, 2020
ஸ்ரீ அன்னை

இறை சக்தி

இறைவனின் சக்தி அளவற்றது. நம் நம்பிக்கைதான் சிறியது. – ஸ்ரீ அன்னை
August 15, 2020
ஸ்ரீ அன்னை

பொறுமை

இன்று நாம் அனுபவப் பூர்வமாக உணர இயலாதவையை நாளை உணர முடியும். பொறுமையுடன் இருப்பதொன்றே தேவை. – ஸ்ரீ அன்னை 
April 24, 2020
ஸ்ரீ அன்னை

பிரதி

ஸ்ரீ அரவிந்தர் எப்போதும் நமக்கு ஒளியூட்டிக்கொண்டும், வழிகாட்டியவாறும், நம்மைப் பாதுகாத்தபடியும் நம்முடனே இருக்கிறார். அவரது பெருங்கருணைக்கு முழு நம்பிக்கையின் மூலமாக நாம் பிரதி செய்வோமாக. – ஸ்ரீ அன்னை