ஸ்ரீ அன்னை

September 17, 2021
ஸ்ரீ அன்னை

முன்னேற்றம்

எப்போதும் அதிக நிறைவான வெளிப்பாட்டையும், எப்போதும் அதிக நிறைவான, உயர்வான உணர்வு நிலையையும் நோக்கி நாம் சலிப்பின்றி முன்னேறுவோமாக. – ஸ்ரீ அன்னை
September 16, 2021
ஸ்ரீ அன்னை

அறியாமை

நம் சிந்தனைகள் இன்னும் அறியாமையில் இருக்கின்றன. அவைகள் ஒளியூட்டப்பட வேண்டும். நம் ஆர்வம் இன்னும் குறைபாடு உடையதாய் இருக்கிறது. அது தூய்மைப் படுத்தப்படவேண்டும். நமது செயல்கள் இன்னும் வலுவற்றவையாக இருக்கின்றன. அவை ஆற்றல் வாய்ந்தவையாக ஆக […]
September 15, 2021
ஸ்ரீ அன்னை

நோய்கள் குணமடைய செய்யவேண்டியது

எல்லாவற்றிற்கும், அது எதுவானாலும், அதைக் குணப்படுத்துவதற்கு மிக நிச்சயமான வழி, அமைதியாக இருந்து ஒருமுனைப்பட்டு, மேலிருந்து சக்தி வேலை செய்யும்படி விடுவதுதான். உறுதியான நம்பிக்கையுடனும் வலுவான இச்சாசக்தியுடனும் சரியானபடி, சரியான நேரத்தில் போதிய அளவு காலத்திற்கு […]
September 12, 2021
ஸ்ரீ அன்னை

உண்மை

என்று பூமி உண்மைக்கு விழிப்புற்று இறைவனுக்காகவே வாழ்கிறதோ, அந்நாளே தெய்வீக ஆசியுடன் கூடிய நன்னாளாகும். – ஸ்ரீ அன்னை
September 11, 2021
ஸ்ரீ அன்னை

முயற்சி

நல்ல வேலையெல்லாம், ஒருங்கிணைந்த பொறுமையுடன் கூடிய முயற்சியினால் செய்யப்படுகின்றன. – ஸ்ரீ அன்னை
September 9, 2021
ஸ்ரீ அன்னை

ஆர்வம்

தொடர்ந்து ஆர்வமுறு ! தேவையான முன்னேற்றம் வந்தே தீரும். – ஸ்ரீ அன்னை
September 8, 2021
ஸ்ரீ அன்னை

வேலை

வேலைக்கு திறமை எவ்வளவு தேவையோ, அவ்வளவுக்கு நிதான உறுதியும், ஒழுங்கும் தேவை. – ஸ்ரீ அன்னை
September 7, 2021
ஸ்ரீ அன்னை

மருந்து

சாந்தியும், அசைவின்மையும் நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. நமது உயிரணுக்களுக்குள் சாந்தியைக் கொண்டு வந்துவிட்டால் குணமடைந்து விடுவோம்.  – ஸ்ரீ அன்னை
September 6, 2021
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

சாவித்ரி உலகின் திருவுருமாற்றத்திற்கான மந்திரம். – ஸ்ரீ அன்னை