காரியங்கள் கடினமாகும்போது எல்லாம் அமைதி யாகவும் மெளனமாகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு இடையூறாக இருந்தாலும் நாம் உண்மையாக மெளனம் சாதித்தோமானால் தீர்வு நிச்சயம் வரும். – ஸ்ரீ அன்னை
தடைகள் ஒரு பொருட்டல்ல. இடையூறுகள், அவற்றை வெற்றி கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சியை உணர்வதற்காகவே தோன்றுகின்றன. முன்னே செல். நம்பிக்கையுடன் இரு. எல்லாம் சரியாகிவிடும். – ஸ்ரீ அன்னை
எல்லோருக்குமே துன்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை எதிர்கொள்ளும் முறையே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. சிலர் புன்னகை செய்கிறார்கள். சிலர் பெரிதாக்கி விடுகிறார்கள். – ஸ்ரீ அன்னை