துயரத்தை ஆதரிக்காதே. துயரம் எல்லாம் உன்னைவிட்டு ஒரேயடியாகப் போய்விடும். தவிர்க்க முடியாத ஒன்றல்ல துயரம். துயரமற்ற நிலைத்த உற்சாகமான அமைதியான மனநிலை யில்தான் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகிறது. செயா. – ஸ்ரீ அன்னை
பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே இறைவன்தான். இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை. இறைவன் ஒருவன்தான் இருக்கிறாள். நம்மை பயமுறுத்துவதற்காகத் தோன்றுவது எல்லாம் இறைவனின் சிறிய பொருளற்ற மாறுவேடங்கள் தான். – ஸ்ரீ அன்னை
உன் தவறுகளை உணர்ந்து கொள்ளுதல் நல்லது. ஆனால் உன்னையே வதைத்துக் கொள்ளக் கூடாது. நீ வருந்தக் கூடாது அதற்குப் பதில் நீ உன்னைத் திருத்திக் கொள்ளுதலே சிறந்தது. – ஸ்ரீ அன்னை
என் பாதுகாப்பு உனக்கு எப்பொழுதும் இருக்கிறது. எந்தக் கெட்டதும் நடக்காது. ஆனால் அச்சத்தை ஒழிக்கும் முடிவுக்கு நீ வர வேண்டும். அதன் பிறகு என் சக்தி முழுமையாக வேலை செய்யும். – ஸ்ரீ அன்னை