ஸ்ரீ அன்னை

April 23, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

உணர்ச்சிகளையோ, எண்ணங் களையோ ஒழுங்குபடுத்துவதைவிட பலவந்தமாக அடக்குவது சுல்பமே. ஆனால் உண்மையான ஒழுங்கு நிலையில் வைப்பதென்பது அடக்கு முறையைவிட பன்மடங்கு சிறந்தது. எனது ஆசிகள் – ஸ்ரீ அன்னை
April 22, 2023
ஸ்ரீ அரவிந்தர்

அன்னையின் மந்திரங்கள்

நம் அறிவு வளர வளர நம் அறியாமையின் அளவை நாம் உணர முடிகிறது. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 20, 2023

அன்னையின் மந்திரங்கள்

இறைவன் நமக்கு எதை அளித்துள்ளானோ அதில் நாம் மன நிறைவு காண வேண்டும். இறைவன் நாம் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறானோ அதை பலவீனமும், பயனற்ற பேராசையும் இன்றி செய்ய வேண்டும். எனது ஆசிகள். – […]
April 19, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

புதிய சக்தியின் வெளிப்பாட்டிற்கு, புதிய வடிவங்கள் தேவை. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 18, 2023
ஸ்ரீ அரவிந்தர்

அன்னையின் மந்திரங்கள்

இன்று செய்ய முடியாததை பின்னொரு நாள் நிச்சயமாகச் செய்ய முடியும். முன்னேற்றத்துக்காக செய்யப்படும் எந்த முயற்சியும் ஒருபோதும் வீணாவதில்லை. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 17, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

எல்லாத் திரைகளும் விலகி எல்லோர் இதயங்களிலும் ஒளி முழுமையாக பிரகாசிக்கட்டும். எனது ஆசிகள் – ஸ்ரீ அன்னை
April 16, 2023
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள்

உடலைப் பொறுத்தவரை, செயலாற்றுந் திறனே அறிவாகும். பார்க்கப்போனால், தன்னால் செய்ய முடிவதை மட்டுமே உடல் அறிகிறது. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை
April 15, 2023

அன்னையின் மந்திரங்கள்

எப்போதும் சரியான செயலை முறையாகச் செய்திட, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் நாம் ஆர்வமுற வேண்டும். எனது ஆசிகள் – ஸ்ரீ அன்னை
April 14, 2023

அன்னையின் மந்திரங்கள்

முன்னேற்றம் என்னும் ஒளிப்பிழம்பை நம் இதயத்தில் சுடர் விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருக்கச் செய்வோமாக. எனது ஆசிகள் – ஸ்ரீ அன்னை